கனேடிய உயர் ஸ்தானிகர் ஷெல்லி வைற்றிங் குழுவினருடன்

முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் சந்திப்பு


இனங்களுக்கிடையில் ஏற்படுகின்ற பிணக்குகளுக்கு இணக்கத் தீர்வுகளை காண்பதற்கும் இனங்களுக்கிடையில் நிலவும் விரிசல்களை வெகுவாகக் குறைத்து சமூகங்களுககு மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவதற்குமான பொறிமுறை ஒன்றின் அவசியம் பற்றி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் ஷெல்லி வைற்றிங் தலைமையில் தம்மைச் சந்தித்துக் கலந்துரையாடிய அந்நாட்டின் உயர் மட்டக் குழுவினரிடம் தெரிவித்தார்.
இன்று 1 ஆம் திகதி புதன் கிழமை பிற்பகல் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும், சுகாதார பிரதியமைச்சருமான பைசல் காசிம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் முதலியோருடன் ஒட்டாவா நகரில் செயல்படும் கனேடிய பூகோள விவகார அமைப்பின் பிரதிநிதி பயாஸ் மஞ்ஜி, கனேடிய உயர் ஸ்தானிகராலய அரசியல, பொருளாதார, வர்த்தக ஆலோசகர் ஜெனிபர் ஹார்ட் ஆகியோரும் பங்குபற்றினர்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரையும் பிரதிநிதிகளையும் சந்தித்த பிரஸ்தாபக் குழுவினர் யுத்தத்துக்குப் பின்னரான காலப்பகுதியில் நாட்டில் படிப்படியாக ஏற்பட்டுவருகின்ற மாற்றங்கள் பற்றியும் இனமுரண்பாடுகளும் கசப்புணர்வுகளும் குறைவடைந்து வருகின்றனவா என்பது பற்றியும் அறிந்துகொள்வதில் அதிக ஆர்வம் செலுத்தினர்.
யுத்தகாலத்திலும் பின்னரும் தமிழ் மக்களிடமிருந்து பாதுகாப்புப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை மீளக் கையளிக்கும் நடவடிக்கைகள் வடகிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சூழ்நிலையில், முஸ்லிம் மக்களிடமிருந்து அரசபடையினராலும் போராட்டக் குழுக்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டும் அபகரிக்கப்ட்டும் இருந்த காணிகளை அவற்றின் உரிமையாளர்களுக்கு மீண்டும் கையளிப்பதில் காட்டப்படும் அசமந்தப்போக்கில் மாற்றம் ஏற்பட்டாக வேண்டும் என அமைச்சர் ஹக்கீம் கூறினார்.

அத்துடன், அரசியலமைப்புச் சீர்திருத்தம், அதிகாரப் பரவலாக்கம், தேர்தல் மறுசீரமைப்பு என்பனபற்றி அமைச்சர் தெளிவுபடுத்தியதோடு குறிப்பாக உத்தேச தேர்தல் சீர்திருத்தம், உள்ளுராட்சி சமைகளுக்கான எல்லை மீள் நிருணயம் என்பவற்றின் விiவாக சிறுபான்மைக் கட்சிகளும் சிறிய கட்சிகளும் எதிர் நோக்கும் ஆபத்துக்களையும் சுட்டிக்காட்டினார்.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top