கேகாலை சாந்த மரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழா

கல்வி ,வர்த்தக கண்காட்சியை ஜனாதிபதி திறந்து வைத்தார்

கேகாலை சாந்த மரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழா ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (01) முற்பகல் இடம்பெற்றது.
இன்று முற்பகல் கல்லூரிக்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்களை மாணவர்கள் அன்புடன் வரவேற்றனர்.
கல்லூரியின் 150வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெறும் கல்வி மற்றும் வர்த்தக கண்காட்சியை ஜனாதிபதி அவர்கள் திறந்து வைத்தார்.

அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, சப்ரகமுவ மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேரா முதலமைச்சர் மஹிபால ஹேரத் ஆகியோர் உள்ளிட்ட மாகாண சபை உறுப்பினர்களும் கல்லூரியின் அதிபர் திருமதி ஹேமா விக்கிரமரத்ன, ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.












0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top