சர்வதேச நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு

டிஜிட்டல் யுகத்தில் நுகர்வோர் உரிமைகள்

விஷேட மாநாடு நிறைவு நிகழ்வு

சர்வதேச நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டுடிஜிட்டல் யுகத்தில் நுகர்வோர் உரிமைகள்எனும் தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விஷேட மாநாட்டின் நிறைவு நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களது தலைமையில் நேற்று 15 ஆம் திகதி பிற்பகல் கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் நடைபெற்றது.
சமூக ஊடகங்கள் மூலம் நுகர்வோர் அதிகார சபையுடன், நுகர்வோரை நெருங்கச் செய்யும் செயற்திட்டமும் ஜனாதிபதி அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.
நுகர்வோர் அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆவண குறும்பட போட்டியில் வெற்றிபெற்ற நால்வருக்கு ஜனாதிபதி அவர்களால் பரிசு வழங்கப்பட்டது.
கைத்தொழில், வர்த்தக விவகார அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களால் ஜனாதிபதி அவர்களுக்கு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.

அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், ஹரீன் பெர்ணான்டோ, ராஜாங்க அமைச்சர் சம்பிகா பிரேமதாஸ, கைத்தொழில், வர்த்தக விவகார அமைச்சின் செயலாளர் சிந்தக எஸ். முத்துஹெட்டி, நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ஹசித திலகரத்ன உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

உணவு உள்ளிட்ட நுகர்வோர் பொருட்களின் தரமே

அபிவிருத்திக்கு முக்கிய அளவீடு

– ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

நாடொன்றின் அபிவிருத்திக்கு முக்கிய அளவீடு உணவு உள்ளிட்ட நுகர்வோர் பொருட்களின் தரத்திலேயே தங்கியுள்ளது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சர்வதேச நுகர்வோர் உரிமை தினத்தை முன்னிட்டு கொழும்பில் நேற்று நடைபெற்ற மாநாட்டில் ஜனாதிபதி உரையாற்றியபோதே இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ,
 இலங்கையின் பெரும்பாலான உணவகங்களின் சமையல் அறைகளில் இந்தத் தரத்தைக் காணக்கூடியதாக இல்லை என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
 டிஜிற்றல் பாவனையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை மற்றும் அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்படுவது அவசியமாகும். நவீன தொழில்நுட்பங்கள் வளர்ச்சி பெறும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மனித வள பயன்பாடு தொடர்பில் பிரச்சினைகள் எதிர்நோக்கப்படுவதையும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

 நுகர்வோருக்கு பொருட்களை விநியோகிக்கும் அனைத்து நிறுவனங்களும் தமது மனிதாபிமான பொறுப்பை அடையாளம் காண வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top