கிண்ணியாவில் டெங்கு பரவல்

சுகாதார அமைச்சருக்கு முஸ்லிம் கவுன்ஸில் கடிதம்



திருகோணமலை மாவட்ட கிண்ணியாப் பகுதியில் வேகமாக பரவிவரும் டெங்கு நோய் தொடர்பில் அவசரமாக உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் செவ்வாயன்று வேண்டுகோள் விடுத்தது.
விசேட கடிதமொன்றின் மூலம் கவுன்ஸிலின் தலைவர் என்.எம். அமீன் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
கடந்த சில நாட்களுக்குள் 13 பேர் இந்த பரவிவரும் காய்ச்சல் நோயினால் உயிரிழந்துள்ளனர். இன்று இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், அப்பிரதேசத்தை அனர்த்தப் பிரதேசமாக பிரகடனப்படுத்துமாறு தங்களைக் கேட்டுக் கொள்கின்றோம் எனவும் அவர் அக்கடிதத்தில் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இப்பிரதேசத்தில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிப்பதற்கு தேவையான உடனடி வைத்திய ஆளணியினரையும், மருந்து வசதிகளையும் கொழும்பிலிருந்து அனுப்பி வைக்க ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் தங்களைக் கேட்டுக் கொள்கின்றோம்.

நீங்கள் முன்னெடுக்கும் அவசர நடவடிக்கைகளுக்கு தங்களது மேலான நன்றிகளையும் உங்களுக்கு எமது அமைப்பு சார்பாக தெரிவித்துக் கொள்கின்றோம் எனவும் அவர் அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top