மன்னார் - நடுக்குடா மின்சார செலுத்துகை
மார்க்கத்தின் நிர்மானப்பணிகளுக்கு
குறைந்த விலை மனுவினை வழங்கியுள்ள
நிறுவனத்துக்கு வழங்குவதற்கு
அமைச்சரவை அங்கீகாரம்
பசுமை சக்தி அபிவிருத்தி மற்றும் சக்தி வினைத்திறன் மேம்பாட்டு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மன்னார் - நடுக்குடா மின்சார செலுத்துகை மார்க்கத்தின் நிர்மானப் பணிகளுக்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 1,379.9 மில்லியன் ரூபாய்களுக்கு, அனுமதிக்கப்பட்ட விலை மனுக்கோரலின் அடிப்படையில் குறைந்த விலை மனுவினை வழங்கியுள்ள நிறுவனத்துக்கு வழங்குவதற்கு மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சர் ரன்ஜித் சியபலாப்பிட்டிய அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
0 comments:
Post a Comment