உலக பல்கலைக்கழக(அமெரிக்க) விருது பெறும்

எழுத்தாளர் வஸீலா ஸாஹிர்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)


இலங்கைப் பெண் எழுத்தாளர் வஸீலா ஸாஹிர் எழுதியமொழியின் மரணம்சிறுகதை நூலுக்கு உலகத் தமிழ்ப் பல்கலைகழகத்தின் விருது கிடைக்கவுள்ளது.
இந்நூல் கடந்த 2016 டிசம்பர் 03ஆம் திகதி இந்தியாவில் வெளியீட்டு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க உலக தமிழ்ப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ள விருது வழங்கும் நிகழ்வின் போதே இந்த நூலுக்கும் விருது கிடைக்கவுள்ளது.
அமெரிக்க உலக தமிழ்ப் பல்கலைக்கழகம் சிறந்த எழுத்தாளர்களின் நூல்களைத் தெரிவு செய்து விருதும் சான்றிதழும் வழங்கும் விழா எதிர்வரும் 18ஆம் திகதி சனிக்கிழமை இந்தியாவில் சென்னை மாநகரில் நடைபெறவுள்ளது.
சென்னை ரீ.ரீ. கே. சாலை, புது எண் 168, முதல் மாடியில் அமைந்துள்ள, மின்ஹால் மியூசிக் அகடமியில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி என் வள்ளி நாயகம் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார். அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைக்கழக வேந்தர், டாக்டர் செல்வின் குமார் சிறப்புரை நிகழ்த்துவதோடு, சென்னை மணிமேகலை பிரசுர நிர்வாக இயக்குனர், முனைவர் ரவி தமிழ்வாணன் வாழ்த்துரை வழங்குகிறார். செல்வி பவித்ரா நிகழ்ச்சியை நெறிப்படுத்துகிறார்.
மினுவாங்கொடையைச் சேர்ந்த வஸீலா ஸாஹிர் எழுதிய நூலில் முஸ்லிம் பெண்களின் இல்லற வாழ்க்கையில் உள்ள சீரழிவுகள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி உணர்வுபூர்வமாக எழுதியுள்ளார். அனைவரும் படிக்க வேண்டிய  படிப்பினை நூல்.

காத்திரமான கருத்துக்களையும் படிப்பினைகளையும் கொண்ட இவரது நூல் படைப்புகள் குறுகிய காலத்தில் பல விருதுகளுக்கு தெரிவு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top