இலங்கையில் நல்லிணகத்தை கட்டியெழுப்ப
ஜனாதிபதி நடைமுறைப்படுத்தும் வேலைத் திட்டங்களுக்கு
அமெரிக்கா பாராட்டு
இலங்கையின் நல்லிணக்க நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொள்ளும் நடவடிக்கைகளை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் பாராட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட இருக்கும் யோசனைக்கு இலங்கையுடன் இணைந்து இணை அனுசரணை வழங்கவும் அமெரிக்கா இணக்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் உள்ள சகலருக்கும் மத்தியிலும்சமாதானத்தை ஏற்படுத்தவும், சட்டத்தை வலுப்படுத்தவும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளையும் அவர்கள் பாராட்டியுள்ளார்கள்
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:
தெற்கு மற்றும் மத்திய ஆசியா: இலங்கை மீதான ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் பிரேரணைக்கு ஆதரவு
ஊடக அறிக்கை
மார்க் சி. ரோனர்
தற்காலிக திணைக்கள ஊடகப் பேச்சாளர்
வோஷிங்டன், டிசி
பங்குனி 15,
2017
இலங்கை மக்கள் அனைவருக்கும் நீடித்த சமாதானம் மற்றும் நீதிக்கான தமது எமது நிலையான அர்ப்பணிப்பினை பிரதிபலிக்கும் வகையில் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் தொடர்பான பிரேரணை வரைபு ஒன்றினை அமெரிக்காவும், இலங்கை மைய குழுவின் ஏனைய நட்பு நாடுகளும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் மார்ச் பங்குனி மாதம்13ஆம் திகதி திங்கட்கிழமை முன்வைத்தன.
பிரேரணையை தயாரிப்பதற்கு ஐக்கிய இராச்சியம் மொன்டேநீக்ரோமற்றும் மசீடோனியா என்பவற்றுடன் நெருக்கமான கலந்தாலோசனையிலும் இலங்கை அரசாங்கத்துடன் பங்காளித்துவத்துடனும் ஐக்கிய அமெரிக்கா செயற்பட்டது.
முரண்பாடு மீள்நிகழாமையை உறுதி செய்வதற்கு உதவும் மற்றும் அனைத்து இலங்கையர்களுக்கும் ஜனநாயக ஆட்சி முறையையும் சுதந்திரத்தையும் வலுப்படுத்தும் இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் நீதிக்கும் ஆதரவளிக்கும் வரைபு உள்வாங்கப்படும் என நாம் எதிர்பார்த்திருக்கின்றோம்.
பிரேரணைக்கு துணை அனுசரணை அளிப்பதற்கு இலங்கை இணங்கியமையையிட்டு நாம் மகிழ்வு கொள்கின்றோம். துணை அனுசரணையாளர்கள் பட்டியலில் தமது பெயரையும் சேர்த்துக் கொண்டு இலங்கையில் நல்லிணக்கத்திற்கும், சமாதானத்திற்கும் ஆதரவினை வெளிப்படுத்துமாறு அவ்வெண்ணம் கொண்ட ஐ.நா உறுப்பு நாடுகளை நாம் அழைக்கின்றோம். நல்லிணக்கத்தை முன்னிறுத்துவதற்கான ஜனாதிபதி சிறிசேனாவின் நிர்வாகத்தின் தொடர்ச்சியான முயற்சிகளை அமெரிக்கா பாராட்டுகின்றது.
0 comments:
Post a Comment