நாட்டில்
அரிசிக்குத் தட்டுப்பாடு இல்லை
- அமைச்சர்
றிஷாத் பதியுதீன்
நாட்டில்
அரிசித் தட்டுப்பாடு
இல்லை என்று
கைத்தொழில் மற்றுமு; வணிகத்துறை அமைச்சர் றிஷாத்
பதியுதீன் தெரிவித்துள்ளார்.
சதோச
விற்பனை நிலையங்களின்
ஊடாக உயர்ந்த
பட்ச விலையை
விட 3 ரூபா
குறைவில் அரிசி
விற்பனை செய்யப்படுவதாக
அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளை,
சிவப்பு அரிசி
வகைகள் 75 ரூபாவிற்கு
விற்பனை செய்யப்படுகின்றன.
உயர்ந்த பட்ச
விலைக்கு அரிசியை
விற்பனை செய்ய
முடியாது என்று
சில்லறை வர்த்தகர்கள்
குற்றம் சாட்டினாலும்
அவர்களுக்குத் தேவையான மொத்த அரிசியை சதோச
விற்பனை நிலையங்கள்
ஊடாகப் பெற்றுக்கொள்ளலாம்.
எதிர்வரும்
பண்டிகைக் காலத்தில்
அரிசியின் விலை
குறைவடையுமே அன்றி அதிகரிக்காது என்று அமைச்சர்
மேலும் நம்பிக்கை
தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment