ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழு
ஜனாதிபதி அவர்களின் தலைமையில் ஒன்றுகூடல்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழு மற்றும் அகில இலங்கை செயற்குழு என்பன நேற்று 2 ஆம் திகதி பிற்பகல் இலங்கை மன்றத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் ஒன்றுகூடினர்.
சட்ட சங்கம், ஆசிரியர் சங்கம்,தொழிற்சங்கங்கள், பட்டதாரிகள் சங்கம் உள்ளிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்த அனைத்து சங்கங்களினதும் உறுப்பினர்கள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றியதுடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமைச்சர் மகிந்த அமரவீர உள்ளிட்டோரும், பிரதியமைச்சர் தீ.மு. ஜயரத்ன, முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஸ, அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, அதாவுத செனெவிரத்ன உள்ளிட்ட கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.
0 comments:
Post a Comment