மொஸ்கோ நகரத்தை சென்றடைந்த
ஜனாதிபதி
மைத்ரிபால சிறிசேன
உற்சாகமான வரவேற்பு
ரஷ்ய
ஜனாதிபதி விளாடிமிர்
புட்டின் அவர்களின்
விஷேட அழைப்புக்கமைய
ரஷ்யாவில் மூன்றுநாள்
உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பித்த ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேன அவர்கள்
நேற்று 22 ஆம் திகதி பிற்பகல் மொஸ்கோ
நகர டொமொடேடுவா
(Domodedovo) சர்வதேச விமான நிலையத்தை
சென்றடைந்தார்.
ரஷ்ய
அரசாங்கத்தின் சார்பில் பிரதி வெளிவிவகார அமைச்சர்
Igor Morgulov உள்ளிட்ட உயர் அதிகாரிகளால்
ஜனாதிபதி உள்ளிட்ட
இலங்கை தூதுக்குழுவினர்
உற்சாகமாக வரவேற்கப்பட்டனர்.
ஜனாதிபதி
மைத்ரிபால சிறிசேன
அவர்களது ரஷ்யாவுக்கான
உத்தியோகபூர்வ விஜயத்தின் முக்கிய நிகழ்வாக ஜனாதிபதி
சிறிசேன அவர்களுக்கும்
ரஷ்ய ஜனாதிபதி
விளாடிமிர் புட்டின் அவர்களுக்குமிடையிலான
சந்திப்பு இன்று பகல் மொஸ்கோ நகரில்
கிரெம்ளின் மாளிகையில் இடம்பெறவுள்ளது.
இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் இராஜதந்திர தொடர்புகள் ஆரம்பிக்கப்பட்டு 60 வருடங்கள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்ட வைபவத்தில் ஜனாதிபதி இன்று மாலை கலந்துகொள்ள உள்ளார்.
இலங்கை அரச தலைவர் ஒருவருக்கு ரஷ்யாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்திற்கு உத்தியோகபூர்வமான அழைப்பு 43 வருடங்களின் பின்னரே விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், இந்த அழைப்பை விடுத்துள்ளமை விசேட அம்சமாகும்.
இதற்கமைவாக, இலங்கை ஜனாதிபதியின் சார்பில் அந்நாட்டின் அதிஉயர் கௌரவத்தை வழங்குவதற்காக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இரு நாட்டு அரச தலைவர்களுக்கு இடையிலான உத்தியோக பூர்வ சந்திப்பின்பின்னர் இரண்டு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார வர்த்தக மற்றும் அரசியல் கலாச்சாரத் தொடர்புகளை வலுவூட்டும் வகையில் பல புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளன. இரு நாடுகளுக்கு இடையிலும் வர்த்தகம், சந்தை தொடர்புகளை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை - ரஷ்ய வர்த்தக அமைப்பு ஏற்பாடு செய்துள்ள வர்த்தகர்களுக்கு இடையிhன சந்திப்பிலும் ஜனாதிபதி கலந்து கொள்ள உள்ளார்.
ரஷ்யாவில் கல்வி பயிலும் இலங்கை மாணவர்களையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விஜயத்தின்போது சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment