கிராமிய பாலங்களின் நிர்மாணத்திட்டம் - கட்டம் 11
மேலதிக 63 பாலங்களை நிர்மாணிப்பதற்கு
அமைச்சரவை அங்கீகாரம்
நாணயமாற்று விகிதாசார அதிகரிப்பு காரணமாக கிராமிய பாலங்களின் நிர்மாணத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ஒப்பந்த தொகையில் ஒரு தொகைப்பணம் எஞ்சுகின்றது. இதனைக் கருத்திற் கொண்டு குறித்த மிகுதி தொகையினையும் பயன்படுத்தி மேலதிகமாக 63 பாலங்களை நிர்மாணிப்பதற்கும், இவ் வேலைத்திட்டத்தின் கால வரையறையை 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் 08ம் திகதியிலிருந்து மேலும் 03 மாதங்களுக்கு நீடிக்கவும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைசல் முஸ்தபா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
0 comments:
Post a Comment