வஸீலா ஸாஹிர் எழுதிய
மொழியின் மரணம்! இந்தியாவில் விருது
இலங்கைப்
பெண் எழுத்தாளர்
வஸீலா ஸாஹிர்
எழுதிய ‘மொழியின்
மரணம்’சிறுகதை
நூலுக்கு உலகத்
தமிழ்ப் பல்கலைகழகத்தின்
விருது நேற்றைய
தினம் கிடைத்துள்ளது.
மினுவாங்கொடையைச்
சேர்ந்த வஸீலா
ஸாஹிர் எழுதிய
நூலில் முஸ்லிம்
பெண்களின் இல்லற
வாழ்க்கையில் உள்ள சீரழிவுகள், அதனால் ஏற்படும்
பாதிப்புகள் பற்றி உணர்வுபூர்வமாக எழுதியுள்ளார். அனைவரும்
படிக்க வேண்டிய படிப்பினை
நூல்.
காத்திரமான
கருத்துக்களையும் படிப்பினைகளையும் கொண்ட இவரது நூல்
படைப்புகள் குறுகிய காலத்தில் பல விருதுகளுக்கு
தெரிவு செய்யப்பட்டு
வருவது குறிப்பிடத்தக்க
விடயமாகும்.
அமெரிக்கா
உலகத் தமிழ்
பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்த சிறந்த நூல்களுக்கான
விருதில், ”மொழியின் மரணம்” என்ற நூலும்
தெரிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை
ரீ.ரீ. கே. சாலை, புது எண் 168, முதல் மாடியில் அமைந்துள்ள, மின்ஹால் மியூசிக் அகடமியில்
குறித்த விருது
வழங்கும் நிகழ்வு
இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment