கிண்ணியா தள
வைத்தியசாலையில்
அமைச்சர் ரவூப்
ஹக்கீம்
பிரதி அமைச்சர்
பைசால் காசீம்
கிண்ணியா
தள வைத்தியசாலைக்கு
இன்று 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை விஜயம்
செய்த ஸ்ரீலங்கா
முஸ்லீம் காங்கிரஸ்
தலைவரும் அமைச்சருமான
ரவூப் ஹக்கீம்,
அங்கு டெங்கு
நோயினால் பாதிக்கப்பட்டு
சிகிச்சை பெற்றுவரும்
பொதுமக்களை பார்வையிட்டார்.
இச்சந்திப்பில்
சுகாதார பிரதி
அமைச்சர் பைசால்
காசீம், பாராளுமன்ற
உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், கிழக்கு
மாகாண சுகாதார
அமைச்சர் ஏ.எல். நஸீர்,
உள்ளிட்ட கட்சியின்
முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment