வடக்கு,கிழக்கு இணைப்புக்கு நாம் எதிரானவர்கள் அல்ல
புதிய நகர அபி­வி­ருத்­தித்­திட்டம் பலாத்­கா­­மா­கவோ
ஒரு­­லைப்­பட்­­மா­கவோ நடை­மு­றைப்­­டுத்­தப்­படமாட்­டாது.
கல்முனை தமிழ் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் ஹக்கீம்

வடக்கு, கிழக்கு இணைப்­பிற்கு நாம் எதி­ரா­­வர்­­ளல்ல.கல்­முனை தமிழ்ப்­பி­­தேச செ­யலக தர­மு­யர்த்­­லுக்கும் எதி­ரா­­வர்கள் அல்ல. எனினும் கரை­யோர மாவட்டம் நிலத்­தொ­டர் ­பற்ற முஸ்லிம் அலகு தொடர்பில் நிபந்­­னை­யுடன் வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பாக சம்­பந்தன் ஐயா­வோடு பேசி­­ரு­கின் றோம். அதற்­கான நியா­­மான தீர்வு எட்­டப்  படும் என்ற நம்­பிக்­கை ­உள்­ளது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ்  தலைவரும் அமைச்சருமான ரவூப்­ஹக்கீம் தெரி­வித்துள்ளார்
அமைச்சர் ரவூப்­ஹக்­கீ­முக்கும் கல்­முனை தமிழ் சிவில் சமு­கப்­பி­­தி­நி­தி­களுக்கும் இ­டை­யி­லான சந்­திப்­பு நேற்று முன்தினம் மாலை கல்முனை எஸ்.எல்.ஆர்.விடுதியில் இடம்பெற்றது. இங்கு கருத்து தெரிவித்தபோது அமைச்சர் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.
கல்­முனை தமி­ழப்­பி­­தேச செய­லக தர­மு­யர்த்­­லுக்கும் வடக்கு கிழக்கு மாகாண இணைப்­பிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­மைகள் தடை­யாக இருப்­­தாக அறி­கின்றோம். இந்­நி­லையில் எவ்­வாறு தமிழ்முஸ்லிம் ஒற்­றுமை பற்­றிப்­பே­சு­வது என தமிழ்த்­­ரப்­பினர் கேள்­வி­யெ­ழுப்­பி­­போதே அவர் மேற்­கண்­­வாறு பதி­­ளித்­தார்.
தமிழ்ப்­பி­­தி­நி­திகள் சார்பில் மாக­­சபை முன்னாள் எதிர்­கட்சித் தலைவர் கே.ஏகாம்­பரம் உறுப்­பினர் .விஜ­­ரெத்­தினம் சமு­­சே­வை­யாளர் சந்­தி­­சே­கரம் ராஜன் தலை­மை­யி­லான பிர­தி­நி­தி­களும் இச்­சந்­திப்பில் கலந்­து­கொண்­டனர்.
கல்­முனை மாந­­­சபை தமிழ்ப் பிர­தே­சங்­களைப் புறக்­­ணிக்கும் விடயம், கல்­முனை தமிழ் பிர­தேச செய­லக தர­மு­யர்த்தல், கல்­முனை நகர அபி­வி­ருத்­தித்­திட்டம் உள்­ளிட்ட பல முக்­கிய விட­யங்கள் இங்கு கலந்­து­ரை­யா­டப்­பட்­டன.
கல்­முனை மாக­­சபை, கல்­முனை தமிழ்­மக்­களைப் புறக்­­ணிப்­பது தொடர்பில் பிர­தி­நிதி கே.ஏகாம்­பரம் விரி­வாக எடுத்­து­ரைத்தார்.
கல்­முனை மாந­­­­பையில் தமிழ்­மக்கள் தொடர்­பான பிரச்­சி­னை­களை கையாள ஒரு மாதத்­திற்கு இரு­­­வைகள் சந்­திப்­பொன்றை நடத்­து­வது என்றும். அதில் தமிழர் பிர­தி­நி­திகள் நால்­­ரோடு மாந­கர ஆணை­யாளர் பொறி­யி­­லாளர் சம்­பந்­தப்­பட்ட பிர­தி­நி­திகள் கலந்­து­கொண்டு பேசி­தீர்க்­கலாம் என்றும் பிர­தி­­மைச்சர் ஹரீஸ் தெரிவித்த ஆலோ­­னையை அமைச்சர் ஹக்கீம் அங்­கீ­­ரித்­­தோடு இரு தரப்­பி­னரும் இணக்கம் கண்­டனர்.
 இக் கலந்­து­ரை­யா­டலின் போது கல்­முனை தமிழ் பிர­தேச செய­லகம் தர­மு­யர்த்­தப்­­டாமல் இழுத்­­டிக்­கப்­­டு­­தற்கு முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் கார­­மாக இருப்­பதும் கல்­முனை தமிழ் பிர­தே­சங்கள் கல்­முனை மாந­கர சபையால் புறக்­­ணிக்­­­டு­வதும் கல்­மு­னையில் உள்ள வீதிகள் சில திட்­­மிட்டு பெயர் மாற்றம் செய்­யப்­­டு­வதும் மற்றும் கல்­முனை நகர அபி­வி­ருத்தித் திட்­டத்தில் கல்­முனை பிர­தேச தமிழ் மக்­­ளுக்கு ஏற்­­டக்­கூ­டிய பாதிப்­புகள் குறித்தும் தமிழ் தரப்பினர் வாதங்களை முன் வைத்து கேள்­விகளை எழுப்பினர்.
கல்­முனை தமிழ்ப்­பி­­தேச செய­லகம் தர­மு­யர்த்தல் விடயம் கடந்த 35 வரு­­கா­­மாக முஸ்லிம் தலை­மை­களால் வேண்­டு­மென்றே முட்­டுக்­கட்டை போட்டு இழுத்­­டிக்­கப்­பட்­டு­­ரு­­தாக தமிழ் ­மக்கள் நம்­பு­கின்­றார்கள். இந்­நி­லையில் கல்­மு­னையில் எவ்­வாறு தமிழ் முஸ்லிம் மக்கள் இத­­சுத்­தி­யுடன் ஒற்­று­மை­யாக வாழலாம்? ஆளை ஆள் ஆக்­கி­­மித்து ஒற்­று­மையை ஏற்­­டுத்­­லாமா?
தமிழ்ப்­பி­­தி­நிதி சந்­தி­­சே­கரம் ராஜன் மற்றும் முன்னாள் மாக­­சபை உறுப்­பினர் .விஜ­­ரெத்­தினம் ஆகியோர் உரத்­­கு­ரலில் உங்­­ளுக்கு கல்­முனை தமிழ்ப்­பி­­தேச செய­லக தர­மு­யர்த்­­லுக்கு விருப்­­மில்­லையா? அதனை முதலில் கூறுங்கள் என்­றனர்.
இதற்கு பதி­­ளித்த பிர­தி­­மைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ்,
எதையும் நாம் மனந்­தி­றந்து பேச­வேண்டும். கல்­மு­னை­யி­லுள்ள இரு பிர­தேச செய­­கங்­­ளையும் ஒன்­றாக இணைத்து இரு இனங்­­ளையும் மோத­விட வேண்­டு­மென்­­தற்­காக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த கல்­முனை பிர­தேச செய­­கத்­திற்கு சிங்­கள பிர­தேச செய­லா­ளரை நிய­மித்தார்.
அதிஸ்­­­­மாக மஹிந்த தோற்­­டிக்­கப்­பட்­டதன் கார­­மாக அது நிறை­வே­­வில்லை. கல்­முனை தமிழ்ப் பிர­தேச செய­லக தர­மு­யர்த்­­லுக்கு நாம் எதிர்ப்­பல்ல. ஆனால் அந்­தப் ­பி­ரச்­சினை போன்றே அம்­பாறை மாவட்­டத்தில் பெரும்­பான்­மை­யாக வாழ்­கின்ற முஸ்லிம் சமு­கத்­திற்கும் ஒரு பிரச்­சினை உள்­ளது.
அதா­வது தமிழ்­மொழி வாரி­யான கரை­யோ­­மா­வட்டம் உரு­வாக்­கு­­து­தென்­பது நீண்­­கால கன­வாகும்.
இது தமிழ்­பே­சு­கின்ற இரு­­மு­கங்­­ளுக்கும் பொது­வா­­தொரு மாவட்­டக்­கோ­ரிக்கையாகும். இதனால் இரு­சா­ராரும் நன்­மை­பெ­றலாம்.
எனவே இந்த மொழி­வா­ரி­யான கரை­யோர மாவட்­டத்­திற்கு உடன்­பாடு காணப்­­டு­கின்ற சந்­தர்ப்­பத்தில் கல்­முனை தமிழ்ப்­பி­­தேச செய­லக தர­மு­யர்த்தல் என்­பது ஒரு பிரச்­­னை­யே­யல்ல. அதற்கு நாம் எதிர்ப்­பு­மல்ல. எமது சிவில் சமு­கப்­பி­ரச்­சினை­­ளையும் நாம் பார்க்கவேண்டும். இதுதான் யதார்த்தம். என்று பதிலளித்தார்.
இதன்பின்னர் தமிழ் பிரதிநிதிகள்,
கல்­முனை பழைய பஸ்­­ரிப்பு நிலை­யத்தில் தனியார் வங்­கிக்கு இடம் வழங்­கப்­பட்­டுள்­ளது. அதனால் நகரில் வாக­­நெ­ரிசல் ஏற்­பட்­டுள்­ளது. பஸ் நிலை­யத்­திற்கு செல்­­தானால் தனியார் பஸ் குறுக்­­றுக்கும். மற்­றது கல்­மு­னையில் தமிழ் ஆட்­டோக்கள் ஓட­மு­டி­யாது என்ற வகையில் முன்னாள் மேயர் நிசாம்­கா­ரி­யப்பர் காலை மேசைக்­குமேல் போட்­டுக்­கொண்டு அலட்­சி­­மாகச் சொன்னார்.
கல்­முனை சந்­தாங்­கேணி மைதானம் ஒரு­பொது மைதானம் என்­றுதான் எல்­லோரும் நினைப்­பார்கள். ஆனால் அதனை ஒரு கழகம் மட்டும் பயன்­­டுத்­தி­­ரு­வது யாருக்கும் தெரி­யாது
உத்­தேச கல்­முனை நக­­­பி­வி­ருத்­தித்­திட்டம் கல்­மு­னைவாழ் தமிழ்­மக்­களின் காணி­களை சுவீ­­ரித்து முஸ்­லிம்­களை குடி­யேற்­­வி­ருப்­­தா­கவும் எதிர்­கா­லத்தில் இப்­பி­­தேசம் தாழ்ந்­து­போகும் ஆபத்­தி­ருப்­­தா­கவும் குற்­றம்­சாட்­டினர்.
ஒரு மணி­நேரம் தமிழ்ப் பிர­தி­நி­திகள் பேசி­­வற்றை அவ­தா­னித்து அமை­தி­யா­­வி­ருந்த அமைச்சர் ஹக்கீம் பதிலளித்து கூறு­கையில்:
எத­னையும் பேசித்­தீர்க்க முடியும். உங்கள் மாநக­­சபை பிரச்­சி­னை­களை அதற்­கான உய­­தி­காரம் படைத்த கிழக்­கு­மா­காண முத­­மைச்சர் ஆணை­யா­­ரு­டாகக் கையாள்வார். அது பிரச்­சி­னை­யல்ல. சவக்­கா­லைக்கு காவ­லாளி போடு­வது, வீதி திருத்­து­வது, வடிகான் அமைப்­பது, மின்குமிழ் போடு­வது இதெல்லாம் அவர் பார்த்­துக்­கொள்வார்.
பாரிய அபி­வி­ருத்­திப்­­ணிகள் இருந்தால் என்­னிடம் மதிப்­பீட்­டோடு தாருங்கள் . நாமும் உச்­­ளவு உத­வலாம்.
புதிய நகர அபி­வி­ருத்­தித்­திட்டம் பலாத்­கா­­மா­கவோ ஒரு­­லைப்­பட்­­மா­கவோ நடை­மு­றைப்­­டுத்­தப்­படமாட்­டாது. அதற்கு நான் உத்­­­வாதம் தருகின்றேன். பொதுத்­தே­வை­­ளுக்காக காணிகள் சுவீ­­ரிக்­கப்­­டு­மே­யன்றி முஸ்லிம் மக்­களை ஒரு­போதும் தமி­ழர்­கா­ணி­களில் குடி­யேற்ற அனு­­திக்­­மாட்டோம்.
திட்­டத்­திற்கான திட்டவரைவு வந்­ததும் அனை­­ருக்கும் காட்­டியே அதனை முன்­னெ­டுப்போம். எங்­கா­வது எதற்­கா­வது எதிர்ப்பு இருந்தால் அந்த விட­யத்தைச் செய்­­மாட்டோம்.
கல்­மு­னை­ ­மிழ்­மக்­களின் இன­ப்­­ரம்­பலைப் பாதிக்­கா­­­கை­யில்தான் புதிய நக­­­பி­வி­ருத்­தித்­திட்டம் நடை­மு­றைப்­­டுத்­தப்­படும். அதற்­கான உபா­யங்கள் பின்­பற்­றப்­படும். யாரும் அச்­சப்­படத் தேவை­யில்லை என்றார்.
சட்­டத்­­ரணி ஆரிப்­சம்­சுதீன் கூறு­கையில் கல்­முனை புதி­­­­­ ­பி­வி­ருத்­தித்­திட்டம் ஒரு சமா­தான நக­­மாக மாறும் யாரும் சந்­தே­கம்­கொள்­ளத்­­தே­வை­யில்லை என்றார்.
பிர­தி­நிதி .விஜ­­ரெத்­தினம் மேலும்­கூ­று­கையில்:
தொகு­தி­ரீ­தி­­லான தேர்தல் முறைமை வந்தால் கல்­மு­னைக்கு அதா­வது எமக்கு எம.பி.கிடை­யாது. எனவே இணைந்­துதான் செய­லாற்­­வேண்டும்.
நாம் சாய்ந்­­­ருது பிர­தே­சபை தனி­யாகப் பிரித்துக் கொடுப்­­தற்கு தடை­யில்லை. அவ்வாறாயின் ஏன் இன்னும் எமது தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த நீங்கள் தடையாயிருக்கிறீர்கள்? என்று பிர­தி­நிதி .விஜ­­ரெத்­தினம் கேள்வி எழுப்பினார்.
ற்கு பதிலளித்த பிரதியமைச்சர் ஹரீஸ்,
நாம் தடையாகவிருக்கவில்லை.உங்கள் பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் எமது மொழிவாரியான கரையோர மாவட்டக்கோரிக்கையை முற்றாக எதிர்க்கின்றார். இந்நிலையில் எமது சமுகப்பிரச்சினையையும் நாம் இலாவகமாகக் கையாளவேண்டும்தானே
பொத்துவில் தொடக்கம் கல்முனை வரை தமிழ்,முஸ்லிம் மக்கள் ஒன்றாகஇருக்கின்றனர். எமது 7ஆயிரம் ஏக்கர் வயற்காணிகள் பிடித்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றை விடுவிக்கவேண்டும். தேசிய ரீதியில் முஸ்லிம் காங்கிரசும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும் பேச்சுவார்தையிலீடுபட்டு வருகின்றன. அது தொடரும் நம்பிக்கையுடனிருப்போம். நல்லது நடக்கும் என்றார்.
சந்­திப்பில் அமைச்­­ருடன் பிர­தி­­மைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்­கு­மா­காண முத­­மைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட், கிழக்கு மாகாண சுகா­தார அமைச்சர் .எல்.எம்.நசீர் மற்றும் கிழக்கு மாகா­­சபை உறுப்­பி­னர்­­ளான ஆரிப்­சம்­சுதீன், சிப்லி கல்­முனை மாந­கர ஆணை­யாளர் லியாக்­கத்­தலி ஆகியோர் சமு­­­ளித்­திருந்­தனர்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top