வைரஸ் காய்ச்சல் அச்சுறுத்தல்
சவூதி மன்னரின் மாலத்தீவு பயணம் ஒத்திவைப்பு
Saudi king postpones
visit to Maldives over flu outbreak
மாலத்தீவில்
வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் அங்கு செல்லவிருந்த சவூதி மன்னரின் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சவூதி
மன்னர் சல்மான்
கடந்த ஒரு
மாத காலமாக
உலகின் பல்வேறு
நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த
வரிசையில் மாலத்தீவு
நாட்டிற்கு நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்ள சல்மான்
திட்டமிட்டிருந்தார்.
இந்த
நிலையில், சவூதி
மன்னரின் மாலத்தீவு
சுற்றுப்பயணம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து
சவூதி அரசாங்கம்
வெளியிட்டுள்ள அறிக்கையில் “மாலத்தீவு நாட்டில் அதிகரித்து
வரும் வைரஸ்
காய்ச்சல் காரணமாக
மன்னர் சல்மானின்
சுற்றுப்பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. புதிய திகதி விரைவில் அறிவிக்கப்படும்”
என தெரிவித்துள்ளது.
சுற்றுலாவை
அதிகரிக்கும் வகையில் மாலத்தீவில் முதலீடு செய்ய
சவூதி அரசு
முன்வந்துள்ளது. ஆனால் அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் மாலத்தீவுகளை
சவூதிக்கு ஜனாதிபதிதாரைவார்த்து
விட்டார் என குற்றஞ்சாட்டியுள்ளன.
0 comments:
Post a Comment