போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டு

கட்டாரில் மூன்று இலங்கையர்களுக்கு சிறை!


கட்டாரில் மூன்று இலங்கையர்களுக்கு,சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக கல்ப் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சட்டவிரோதமாக போதைப் பொருள் வைத்திருந்தமை மற்றும் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பிலேயே இலங்கையர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள் வர்த்தகம் மற்றும் போதைப் பொருள் பாவனை போன்ற குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபருக்கு மூன்று வருட சிறைத் தண்டனை விதித்து டோகா குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும்,பிரதான சந்தேகநபருக்கு 2 லட்சம் ரியால் (8.3மில்லியன் ரூபா) அபராதப் பணம் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கஞ்ச பாவனைக் குற்றச்சாட்டு தொடர்பில், ஏனைய இருவருக்கும் தலா ஒரு வருட சிறைத் தண்டனையும், 10ஆயிரம் ரியால் அபராத பணமாக செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களிடம் குருதிப் பரிசோதனை மேற்கொண்ட போதும் அவர்கள் போதைப் பொருள் பயன்படுத்தியுள்ளார்கள் என தெரியவந்துள்ளது.

எனவே,சந்தேகநபர்களுக்கு சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Qatar court jails three Sri Lankans for peddling drugs
A Doha Criminal Court has sentenced three Sri Lankan men to jail and fined for illicit trade and consumption of drugs, according to a report in Gulf Times.
The court sentenced the first and main defendant to three years in jail and imposed a fine of QR 200,000 (about Rs. 8.3 million) for keeping a substantial quantity of heroin for trade and personal consumption.
The other two were sentenced in absentia to one year in jail and ordered to pay a fine of QR 10,000 each for consuming hashish.
The matter had come to light after the Drugs Prevention Department at the Ministry of Interior (MoI) received information from a source that a person was circulating illicit drugs in his area.
An undercover officer had approached him to buy some heroin and the two agreed on a sum of QR 2,500 for the quantity to be sold. At the agreed time and place, the delivery took place and the defendant was accompanying two of his compatriots in his vehicle. Upon further search of their accommodation more quantities of the illicit drugs were found packed and ready for sale.

Further, a blood test conducted on them proved they used to consume heroin and hashish, Gulf Times reported quoting local Arabic daily Arrayah.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top