அரச சேவை ஆணைக்குழுவின் நடைமுறை விதிகள்

அமுலில் உள்ளதால் தாபனக்கோவையின்

அத்தியாயம் 1 முதல் V வரையானவை செல்லுபடியற்றவை 

தாபனப்பணிப்பாளர் நாயகம் அறிவிப்பு

(அபூ முஜாஹித்)


அரச சேவை ஆணைக்குழுவின் நிருவாக நடைமுறை விதிக்கோவை தொடர்பான புதிய விதிகள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டமையால் அரச தாபனக்கோவையின் ஒன்று முதல் ஐந்து வரையான அத்தியாயங்கள் நடைமுறையில் இல்லையென தாபனப்பணிப்பாளர் நாயகம் டப்ளியூ.டீ.சோமதாச அறிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 55(1)ற்கமைய அரச அலுவலர் நியமனம், பதவி உயர்வு, இடமாற்றம், ஒழுக்காற்று விடயம், பதவி நீக்கம் என்பன அரச சேவைகள் ஆணைக்குழுவிற்குரிய அதிகாரமாகும். இவ்வதிகாரங்களை மேலும் வலுவுள்ளதாக்கும் விதத்தில் 1589/30 ம் இலக்க அதிவிசேட வர்த்தமானி பத்திரிகை மற்றும் அதற்குரிய 1777/33 ம் இலக்க திருத்தப்பட்ட வர்த்தமானிப்பத்திரிகை மூலம் 2009.04.02 முதல் நடைமுறை விதிகள் அமுலில் உள்ளன.

இதன் காரணமாக தாபனக்கோவை அத்தியாயம் ஒன்று முதல் ஐந்து வரையான ஆட்சேர்ப்பு, நியமனம், இடமாற்றம், விடுவிப்பு, சேவை நீடிப்பு, ஓய்வு, சேவை நீக்கம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான விதிமுறைகள் இல்லாதொழிக்கப்பட்டுள்ளன என தாபனப்பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

சேவை நீடிப்பு, ஓய்வு பெறுதல் தொடர்பான தாபனக்கோவையின் ஐந்தாம் அத்தியாயம் அதனுடன் தொடர்பான விடயங்கள் தற்போது நடைமுறையில் உள்ளதா? என இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகள் சங்கம் கோரியதற்கமைய அதற்கான பதிலை தாபனப்பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top