அமைச்சர் பௌசிக்கு எதிரான வழக்கு
மே மாதம் 5ம் திகதி மீளவும் விசாரணைக்கு
சிரேஸ்ட
அமைச்சர் ஏ.எச்.எம்
பௌசிக்கு எதிராக
வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கடந்த
அரசாங்க ஆட்சிக்
காலத்தில் அனர்த்த
முகாமைத்துவ அமைச்சிற்கு நெதர்லாந்து அரசாங்கத்தினால் நன்கொடையாக
வழங்கப்பட்ட இரண்டு கோடி ரூபா பெறுமதியான
வாகனம் ஒன்றை
தனது சொந்த
தேவைக்காக அமைச்சர்
பௌசி பயன்படுத்தினார்
என அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தக்
குற்றச்சாட்டு குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்
போது நான்கு
குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையொன்று
தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
லஞ்ச
ஊழல் மோசடி
தவிர்ப்பு ஆணைக்குழுவினால்
அமைச்சருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
நீதிமன்ற
மொழி பெயர்ப்பாளரினால்
குறித்த குற்றப்பத்திரிகை
வாசித்து ஒப்படைக்கப்பட்டது.
இந்தப்
குற்றப் பத்திரிகை
சட்டத்திற்கு முரணான வகையில் அமைந்துள்ளதாக அமைச்சரின்
சார்பில் முன்னிலையான
சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டு
சுமத்தியவர்கள் குற்றச்சாட்டுக்கள் குறித்த
ஆவணத்தை தமக்கு
தரவில்லை என
அமைச்சரின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
இந்த
வழக்கு எதிர்வரும்
மே மாதம்
5ம் திகதி
மீளவும் விசாரணைக்கு
உட்படுத்தப்படவுள்ளது.
0 comments:
Post a Comment