புகைப்படத்தால் கிண்டலுக்கு உள்ளாகியிருக்கும்

டொனால்டு டிரம்பின் மனைவி மெலேனியா

அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலேனியா டிரம்பின் புகைப்படம் அதிகாரப்பூர்வமாக வெள்ளை மாளிகையால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்து பலரும் கிண்டல் செய்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மனைவி மெலேனியா டிரம்பின் புகைப்படத்தை வெள்ளை மாளிகையாளது நேற்று அதிகாரப்பூர்வமாக தங்களது தளத்தில் பதிவேற்றம் செய்தது.
அந்த புகைப்படத்தில், மெலேனியா கருப்பு நிற ஆடை அணிந்து, தனது கைகளை கட்டிக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.
ஒரு நாட்டின் முதல் பெண்மணியாக இருந்து கொண்டு Muppet குழந்தைகள் பொம்மை போன்று தனது முகத்தினை வைத்துள்ளார் என இப்புகைப்படத்தைப் பார்த்து சிலர் கேலி செய்துள்ளனர்.
ஒரு சிலர் Robot போன்று இருக்கிறார் என்றும் பலர் மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் முகம் போன்று அவரது முகம் உள்ளது எனவும் வேறு சிலர் கிண்டல் செய்துள்ளனர்.
மேலும், அந்த புகைப்படத்தின் Background சிலந்தி வலை போன்று இருப்பதால், சிலந்தி வலைக்கு முன்னால், 25 கேரட் வைர மோதிரத்துடன் போஸ் கொடுத்துள்ளார் என இன்னும் சிலர் கிண்டல் செய்துள்ளனர்.

டுவிட்டர் பக்கத்திலும் மெலேனியாவை கிண்டல் செய்து டுவிட்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top