மாணவனின் காதை வெட்டிய

பிரதி அதிபரினால் சர்ச்சை

பாடசாலை மாணவர் ஒருவரின் காதினை பிரதி அதிபர் வெட்டிய சம்பவத்தால் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.
மஹியங்கனை, ரிதிமாலியத்த பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் நேற்று முன்தினம் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
மாணவர் ஒருவருக்கு  அளவுக்கு அதிகமாக வளர்ந்திருந்த முடியை வெட்டுவதற்கு முற்பட்ட சந்தர்ப்பத்தில் மாணவரின் காதும் வெட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து பாடசாலையினுள் சிகிச்சை வழங்கிய பாடசாலை ஆசிரியர்கள், முச்சக்கர வண்டியில் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அந்த பாடசாலையில் கல்வி கற்கும் 11ஆம் வகுப்பு மாணவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
பாடசாலையின் பிரதி அதிபர் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் இருவர், குறித்த மாணவரை பலவந்தமாக பிடித்துக் கொண்டு, கத்தரிக்கோலினால் முடிவெட்டும் போது, முடியுடன் சேர்த்து காதையும் வெட்டியுள்ளனர்.
இந்த நிலையில் மாணவரின் ஆடை முழுவதும், இரத்தம் வடிந்துள்ளதாக காயமடைந்த மாணவன் தெரிவித்துள்ளார்.
மாணவரின் தாயார் பல வருடங்களாக பக்கவாத நோயில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் ஒருவராகும்.
சம்பவம் தொடர்பில் மாணவரின் தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதற்கமைய சம்பவம் தொடர்பில் பிரதி அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவரின் பெற்றோர் பொலிஸ் நிலையத்திற்கு நேற்று மாலை 3 மணியளவில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது ஏனைய மாணவர்கள் மீது இவ்வாறு மோசமாக நடந்து கொள்ள வேண்டாம் என மாணவரின் தந்தை தெரிவித்துள்ளார். அத்துடன் அவர் முன்வைத்த முறைப்பாட்டையும் மீளப் பெற்றுள்ளார்.

இவ்வாறான ஒரு விடயத்தை இதற்கு பின்னர் ஏனைய மாணவர்களுக்கு மேற்கொள்ள வேண்டாம் எனவும், இந்த பிரச்சினையை தொடர்ந்து கொண்டு செல்ல தேவையில்லை என மாணவரின் தந்தை பொலிஸ் நிலையத்தில் தெரிவித்துள்ளார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top