சூப்பர் மார்க்கெட் மீது விழுந்த சிறிய ரக விமானம்

பயணிகள் அனைவரும் பலி

போர்ச்சுகல் நாட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட் மீது விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர்.
போர்ச்சுகல் நாட்டில் உள்ள Lisbon நகருக்கு அருகில் தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சிறிய ரக விமானம் ஒன்றில் விமானி மற்றும் 3 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் நடுவானில் விமானத்தில் தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. முற்றிலுமாக செயலிழந்த அந்த விமானம் வேகமாக கீழே விழுந்துள்ளது.
அப்போது, சூப்பர் மார்க்கெட் ஒன்றில் உள்ள வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் விமானம் பலத்த சத்தத்துடன் விழுந்து வெடித்து சிதறியுள்ளது.
இவ்விபத்தில் விமானத்தில் பயணித்த 4 பேரும் தரையில் இருந்த ஒருவர் என 5 பேர் பலியாகியுள்ளனர். இத்தகவலை விமானப் போக்குவரத்து துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
விமானத்தில் பயணித்த 4 பேரும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. சூப்பர் மார்க்கெட் மீது விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விமான விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் மற்றும் விமானப் போக்குவரத்து துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top