இந்த பெண் குறித்து தகவல் தெரிந்தால்

உடனடியாக அறிவியுங்கள்!

மினுவாங்கொட பிரதேசத்தில் பணமோசடி செய்ததாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
குறித்த பெண் பல்வேறு தொலைபேசி விற்பனை நிலையங்களில் தொலைபேசிகளை காசோலைகள் மூலமாக வாங்கி 3,264,740 ரூபா வரை மோசடி செய்துள்ளதாக வழக்கு பதியப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த பெண் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ள பொலிஸார் இவரை அடையாளம் தெரிந்தால்அறிவிக்குமாறு மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
பெயர் - லக்மாலி பிரியதர்சினி
அடையாள அட்டை இலக்கம் - 915502717 V
பிறந்த திகதி - 1991.02.19
விலாசம் - மல்கடுவாவ, குருணாகல்

இந்த பெண் குறித்து தகவல் தெரிந்தவர்கள் 077 - 3890959 அல்லது 077 - 3741661 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top