கடல்
வழியாக புலம்பெயர்ந்த போது
நான்கு
நாட்களே ஆன குழந்தை மீட்பு!
ஐரோப்பிய நாடுகளுக்கு கடல் வழியாக புலம்பெயர்ந்த பிறந்து
நான்கு நாட்களே ஆன குழந்தை உள்பட 200-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்டோர் லிபியா கடல் வழியாக
ஐரோப்பிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர்.
அப்போது ஸ்பெயின் நாட்டு பாதுகாப்பு படை வீரர்கள்
கடற்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வடக்கு லிபியாவின் சப்ரதாவில் இருந்து சில கி.மீற்ற
தொலைவில் ரப்பர் படகில் பலர் சென்று கொண்டிருப்பதை பாதுகாப்பு படை வீரர்கள்
பார்த்துள்ளனர்.
அவர்களை மீட்டு பாதுகாப்பாக வைத்துள்ளனர். நாளை அவர்கள்
அனைவரும் இத்தாலி செல்வார்கள் என்று கூறப்படுகிறது.
இதில் பிறந்து நான்கு நாட்களே ஆன குழந்தை ஒன்றும் உள்ளது.
இதுகுறித்து பாதுகாப்பு வீரர் ஒருவர் கூறுகையில் நேற்று ஒரு பிணத்தை
கண்டெடுத்தோம். இன்று ஒரு புதிய உயிரை மீட்டுள்ளோம் என்று உணர்ச்சியுடன்
கூறியுள்ளார்.
மீட்கப்பட்ட குழந்தையின் தாய் நைஜீரியாவை சேர்ந்தவர் ஆவார்.
தந்தை கானாவைச் சேர்ந்தவர். இவர்களும் இதில் மீட்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் லிபியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வாழ்ந்து
வந்துள்ளனர். குழந்தை பிறந்த பின்னர் ஐரோப்பிய நாடுகளில ஒன்றிற்கு செல்ல முடிவு
செய்துள்ளனர்.
இதுகுறித்து குழந்தையின் தந்தை கூறுகையில் நாங்கள் பிரான்ஸ்
அல்லது ஜெர்மனி செல்ல விரும்புகிறோம். எங்கள் குடும்பத்திற்கு அங்குதான் ஒரு
எதிர்காலம் உள்ளது என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment