கிழக்கு மாகாணத்தில் புதிய தாதியர்களுக்கான

நியமனங்கள் வழங்கி வைப்பு

கல்முனை பிராந்தியத்திற்கு ஒருவர் மாத்திரமே

கிழக்கு மாகாண புதிய  தாதியர்க்கான 34 நியமனங்களில்,  கல்முனை பிராந்தியத்திற்கு ஒருவருக்கு மாத்திரமே நியமனம் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்நியமனத்தில் அம்பாறை பிராந்தியத்திற்கு 18 பேரும்,  மட்டக்களப்பு பிராந்தியத்திற்கு 05 பேரும், திருகோணமலை பிராந்தியத்திற்கு 10 பேரும் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
கிழக்கு மாகாண புதிய  தாதியர்க்கான நியமனங்கள் இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டினால் இன்று  வழங்கிவைக்கப்பட்டன,
கிழக்கு மாகாண   சபைக்கட்டத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற நியமனம் வழங்கும்  நிகழ்வில் 34  தாதியருக்கான நியமனங்கள் இங்கு வழங்கிவைக்கப்பட்டன.
 கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் .எல் முஹம்மட் நஸீர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்  கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கருணாகரன், உதவிச்செயலாளர் உசைனுடீன், மாவட்ட பணிப்பாளர் முருகாணந்தன் உள்ளிட்ட பலர்  இந்த நிகழ்வில் கலந்து கொண்டதுடன் அவர்களும் நியமனங்ளை வழங்கிவைத்தனர்.
 கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
 இதில் அம்பாறை பிராந்தியத்திற்கு 18பேரும்கல்முனை பிராந்தியத்திற்கு ஒருவரும், மட்டக்களப்பு பிராந்தியத்திற்கு 05 வரும், திருகோணமலை பிராந்தியத்திற்கு 10 பேருக்கான நியமனம் வழங்கி வைக்கப்பட்டன.

கிழக்கில்  தாதியர் பற்றாக்குறை நிலவி வரும்  நிலையில்  இந்த நியமனங்கள் பாரிய உதவியாக அமையும்  என பல்வேறு தரப்பினரால்  தெரிவிக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top