சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித்த சேனாரட்ன
அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம்
அம்பாறை மாவட்டத்திற்கு இன்றும் நாளையும் சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித்த சேனாரட்ன விஜயம் செய்யவுள்ளார்.
இந்த விசேட விஜயத்தின் போது அம்பாறை மாவட்டத்தில் உள்ள பல ஆதார வைத்தியசாலைகளை அமைச்சர் பார்வையிடுவார்.
அம்பாறை தாதியர் பயிற்சிக் கல்லூரியில் இடம்பெறும் சுகாதார மேம்பாட்டு விருதுவழங்கல் விழாவில் அமைச்சர் ராஜித்த சேனாரட்ன பிரதம அதிதியாக கலந்து சிறப்பிப்பார்.
இந்த விஜயத்தின் போது தாதிமாருக்கான வதிவிடத் தொகுதியொன்றை அவர் திறந்து வைக்கவுள்ளார்.
0 comments:
Post a Comment