கிழக்கு மாகாண முதலமைச்சரின்
தமிழ் சிங்கள புத்தாண்டு தினச் செய்தி
புதியதொரு அரசியல்
கலாசாரத்தினை கட்டியெழுப்பும் விதமான தீர்வொன்றை
எதிர்ப்பார்ததிருக்கும் இந்த சந்தரப்பத்தில்
எதிர்ப்பார்ப்பு மிக்க தமிழ் மற்றும் சிங்கள
புத்தாண்டினை எமது மக்கள் வரவேற்க காத்திருக்கின்றனர்.
பெரும்பான்மை
மற்றும் சிறுபான்மை
மக்களுக்கிடையில் வௌிப்படையான
யதார்த்தபூர்வமான கலந்துரையாடல்கள் மற்றும் அர்த்தபுஷ்டிமிக்க கருத்துப் பரிமாறல்களுமே இந்த நாட்டில் நிரந்தரமான
தீர்வொன்றுக்கான சிறந்த அடித்தளத்தை இடும் என்பதை
கருத்திற் கொண்டு
இந்த நாட்டில்
வாழும் அனைத்து
இன மக்களும்
சிறந்த அரசியல்
கலாசாரமொன்றுக்கு வித்திடுவதற்கு முன்வர வேண்டும்,
அனைத்து
சமூகங்களினதும் இணக்கப்பாட்டுடனும் ஏற்றுக்
கொள்ளுக் கூடியதுமான
சிறுபான்மையினருக்கு நியாயமாக வழங்கப்பட
வேண்டிய நிரந்தரமான தீர்வொன்று
இந்த நாட்டில்
மலர வேண்டுமானால்
அதற்கு அனைத்து
தரப்பினருதும் திறந்த மனதுடனான வௌிப்படையான கலந்துரையாடல்கள்
அவசியம் என்பதில்
மாற்றுக் கருத்துக்கள்
இருக்காது என
நினைக்கின்றேன்.
இனங்களுக்கிடையேயான
கலாசார பல்வகைத்தன்மை
தான் இந்த நாட்டின்
அழகை மெருகூட்டுகின்றது
என்ற போதிலும்
அதிலுள்ள
வேறுபாடுகளை திரிபுபடுத்தி
இனங்களிடையே எவ்வாறு
விரிசல்களை ஏற்படுத்தலாம்
என்ற நோக்கத்துடனும்
மக்கள் மனங்களில்
பகைமைகளை வளர்க்கும்
விதமாகவும் சில இனவாத சக்திகள்
முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன.
ஆனால்
மலரவுள்ள இந்த தமிழ் சிங்கள புத்தாண்டில் இந்த நாட்டில் வாழும்
சகல இன
மக்களுக்கும் மனங்களிலுள்ள
கசப்புக்களையும் பகைமைகளையும் மறந்து தமது தாய்த்திருநாட்டின்
சுபீட்சமிக்க எதிர்காலத்திற்காய் ஒன்றிணைய
வேண்டுமென அனைத்து
மக்களிடமும் கேட்டுக்
கொள்கின்றேன்.
எம்மிடமுள்ள சிறிய சிறிய முரண்பாடுகளை தீர்த்துக்
கொள்ள முன்வராமையினால்
தான் எம்
நாடு இன்றும்
பொருளாதார ரீதியில்
பின் தங்கி,
வளர்ந்து வரும்
நாடாகவே இருக்கின்றது
என்பதையுணர்ந்து அதனை மாற்ற அனைவரும் கரம்
கோர்க்க வேண்டும்,
இதேவேளை பல்வேறு
சிரமங்களுக்கு மத்தியில் தமது கல்வியை
முன்னெடுத்து இன்று வரை
வீதியில் இறங்கி
தமக்கான தொழில்வாய்ப்புக்களுக்காக
போராடி வரும்
வேலையற்ற பட்டதாரி
இளைஞர்களை கிழக்கின்
வெற்றிடங்களுக்கு உள்வாங்கும் நடவடிக்கையினை அரசாங்கம்
துரிதப்படுத்த வேண்டும்,
கிழக்கு
மாகாண முதலமைச்சர்
என்ற
வகையில் கிழக்கில்
உள்ள வெற்றிடங்கள்
தொடர்பான சகல
ஆவணங்ளையும் அரசாங்கத்துக்கு கையளித்துள்ள
நிலையில் அவர்களை
அதற்கு உள்வாங்குவதற்கான நடவடிக்கையினை அரசாங்கம்
துரித கதியில்
முன்னெடுத்து மலரவிருக்கும் புத்தாண்டினை
அனைத்து பட்டதாரிகளுக்கும்
தித்திப்பானாய் மாற்ற முன்வர வேண்டும்,
அத்துடன்
முசலி மறிச்சுக்கட்டி
உட்பட வடக்கு
மற்றும் கிழக்கில்
உள்ள பல
பகுதிகளில் மக்கள் தமது சொந்தக் காணிகளை பறிகொடுத்து வேதனையுடன்
காலத்தைக் கடத்து
வருகின்றனர்,
அவர்களுக்கும்
மலரவிருக்கும் இந்தப் புத்தாண்டில் உரிய தீர்வு
வழங்கப்பட்டு அவர்களின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை
ஏற்படுத்த முன்வர
வேண்டும்,
எனவே
மலரவிருக்கும் தமிழ் சிங்களப் புத்தாண்டில் அனைத்து
இன சமூகங்களினதும்
அரசியல் அபிலாஷைகள்
நிறைவேறி இந்த
நாட்டில் அனைத்து
இன மக்களுக்கு
நிரந்தரமான தீர்வொன்று ஏற்பட்டு சந்தேகங்கள் அச்சங்கள்
ஏதுமின்றி மக்கள்
அனைவருக்கும் வாழக்கூடிய சூழ்நிலையொன்று இந்த நாட்டில்
உருவாக வேண்டும்
என பிரார்த்திக்கின்றேன்.
கிழக்கு மாகாண முதலமைச்சர்
ஹாபிஸ் நசீர் அஹமட்’
0 comments:
Post a Comment