கல்முனை ஸாஹிறாவின் புதிய அதிபராக

எம். எஸ். முஹம்மட் நியமனம்

(எம்.எஸ்.எம். ஸாகிர்)



கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையின் புதிய அதிபராக மீராசாஹிபு முஹம்மட் நியமனம் பெற்றுள்ளார்.
இம்மாதம் 05ஆம் திகதி புதன்கிழமை தனது கடமைகளை, ஆசிரியர்கள் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
1978 ஆம் ஆண்டு 11ஆம் மாதம் 01ஆம் திகதி சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் வித்தியாலயத்தில் ஆசிரியராக இணைந்து கொண்ட இவர், பின்னர் மாவடிப்பள்ளி அல் - அஷ்ரப் மகாவித்தியாலயம், சாயந்தமருது அல்- ஹிலால் வித்தியாலயம், சாய்ந்தமருது றியாழுல் ஜன்னா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் பணியாற்றி, 1995ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01ஆம் திகதி கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலைக்கு மாற்றம்  பெற்று, அன்று தொடக்கம் ஆசிரியராக, உதவிப்பகுதித் தலைவராக, பகுதித் தலைவராக, உதவி  அதிபராக, பிரதி அதிபராக பதவி வகித்து தற்போது அதிபராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பயிற்றப்பட்ட பட்டதாரி ஆசிரியராக விளங்கிய இவர், பதவி உயர்வு பெற்று அதிபர் சேவையில் 2009 இல் இணைந்து கொண்டார்அதி சிறந்த உயர்தர பெறுபேறுகளைப் பெற்று பல சாதனையாளர்களையும், நற்பிரசைகளையும் உயர் கல்விமான்களையும் வருடா வருடம் உருவாக்கிவரும் இக் கல்லூரி, அதிபர்களின் வரலாற்றில் இவர் 30 ஆவது அதிபராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். வரலாறுகளில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கும் இப்பாடசாலையில் கல்வி பயின்ற மாணவர்கள் நாட்டின் நாலா புறங்களிலும் கடல் கடந்து வெளிநாடுகளிலும் சிறந்த தொழில்களில் பணியாற்றுகின்றனர்.
நான்கு மாணவர்களுடன் ஓர் அதிபரால் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில், தற்போது 160க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கின்றனர்ஏறத்தாள 2600க்கு மேற்பட்ட மாணவர்கள் கல்விகற்று வருகின்றனர்.
நீண்டகால ஆசிரியர் சேவையில் பணிபுரியும் புதிய அதிபரின் சேவை சிறப்பாக அமைய வேண்டுமென ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள், கல்விச்சமூகம் எனப் பலரும் தமது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.

இவர், மீராசாஹிபு மற்றும் பரீதா உம்மாவின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top