அமெரிக்கர் வரைந்த ஓவியம்

110.5 மில்லியன் அமெரிக்க டொலருக்கு ஏலம்

Basquiat painting fetches record US$110.5m at New York auction

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஓவியர் ஜீன்-மைக்கேல் யாசித் 1982-ம் ஆண்டில் வரைந்த மண்டை ஓடு போன்ற தலை அமைப்பு கொண்ட ஓவியம் (110.5 million dollars)  110.5 மில்லியன் அமெரிக்க டொலருக்கு ஏலம் போனது.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஓவியர் ஜீன்-மைக்கேல் யாசித். இவர் புருக்ளினில் ஹைதி மற்றும் பியூட்ரோ ரிகன் நாடுகளை சேர்ந்த தம்பதியரின் மகன். இவர் பலவிதமான ஓவியங்களை வரைந்து புகழ் பெற்றார்.
தனது வாழ்நாளில் ஓவிய உலகில் 8 ஆண்டுகள் கொடி கட்டிபறந்த அவர் 1988-ம் ஆண்டு தனது 27-வது வயதில் மரணம் அடைந்தார்.
இவர் 1982-ம் ஆண்டில் மண்டை ஓடு போன்ற தலை அமைப்பு கொண்ட ஓவியம் வரைந்தார். அதற்கு அவர் தலைப்பிடவில்லை.
அவர் வரைந்த இந்த ஓவியம் நியூயார்க்குள் சோத்ய மையத்தில் சமீபத்தில் ஏலம் விடப்பட்டது. அந்த ஓவியம் 110.5 மில்லியன் டொலருக்கு ஏலம் போனது.
இதை ஜப்பானை சேர்ந்த கோடீசுவரர் ஏலத்தில் எடுத்தார். இதன் மூலம் இந்த ஓவியம் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஓவியர் பாசித் இறந்து 30 ஆண்டுகளுக்கு பிறகு அதிக விலைக்கு ஏலம் சென்றுள்ளது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top