30 மியான்மர் அகதிகளையும்

மிரிஹான முகாமில் தங்கவைக்குமாறு

நீதிமன்றம் உத்தரவு

 கடந்த மாதம் 30 ஆம் திகதி யாழ் காங்கேசன் துறை கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட 30 மியான்மர் அகதிகளையும் மிரிஹான முகாமில் தங்கவைக்குமாறு யாழ்ப்பாணம், மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த அகதிகள் தொடர்பில் இன்று விசரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த தீர்மானம் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இவர்களை ஐக்கிய நாடுகள்சபை அகதிகளுக்கான ஆணைக்குழுவின் பராமரிப்பின் கீழ் வைத்திருக்க முடியுமா என சட்டமா அதிபரின் ஆலோசனையை பெருமாறும் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அகதிகளுக்கான பூரண மருத்துவ வசதிகளை வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மியன்மார், ரோஹிங்கியா அகதிகள் சார்பில் RRT அமைப்பு நீதிமன்றில் ஆஜரானது.

இலங்கை கடல் எல்லையில் வைத்து இலங்கை கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டதுடன், இவர்களில் ஏழு ஆண்கள், ஏழு பெண்கள் மற்றும் 16 சிறுவர்கள் உள்ளடக்குகின்றனர்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top