சாய்ந்தமருது பொலிவேரின் கிராமத்தில்
அரச நிறுவனங்களுக்கு 405 பேர்ச் காணியும்
இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு 110 பேர்ச் காணியும்
வழங்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலகத்தால் தெரிவிப்பு
(அபூ முஜாஹித்)
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுனாமி மீள்குடியேற்றக் கிராமமான பொலிவேரின் கிராமத்தில் 405 பேர்ச் காணிகள் அரச
நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு
110 பேர்ச் காணியும் வழங்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளரினால் தகவலறியும் உரிமைச்சட்டத்தின்
கீழ் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
சுனாமி
மீள்குடியேற்றக் கிராமமான பொலிவேரின் கிராமத்தில் சுனாமி மீள்குடியேற்றம் மற்றும்
அரச தேவைகளுக்காக
49 ஏக்கர் 02 றூட் காணி அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதேச செயலாளரினால் தகவலறியும்
உரிமைச்சட்டத்தின் கீழ் தகவல்
வழங்கப்பட்டுள்ளது.
இக்காணியில்
589 சுனாமி மீள்குடியேற்ற வீடுகளுக்கும்
அதற்கான பொதுத்தேவைகளுக்குமாக
30 ஏக்கர் காணி
பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது தவிர மேலும்,
விதாதா வள நிலையத்திற்கு 16 பேர்ச்
காணியும்,
மிருக வைத்திய நிலையத்திற்கு 40 பேர்ச்
காணியும்,
மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்களத்திற்கு
20 பேர்ச்
காணியும்,
விவசாய கமநல சேவை நிலையத்திற்கு 79 பேர்ச்
காணியும்,
காரியப்பர் வித்தியாலயத்திற்கு
218 பேர்ச்
காணியும்,
சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு 43 பேர்ச்
காணியும்,
பிரதேச தொழிற்றிறன் பயிற்சி
நிலையத்திற்கு
16 பேர்ச்
காணியும்,
காதி நீதிமன்றத்திற்கு 16 பேர்ச்
காணியுமாக
மொத்தமாக 405 பேர்ச்
காணிகள்
வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை
தனியார்
நிறுவனங்கள்
இரண்டிற்கு
110 பேர்ச்
காணியும்
வழங்கப்பட்டுள்ள
அதேவேளை பொலிவேரியன்
கிராம பள்ளிவாயலுக்கு
160 பேர்ச் காணி வழங்கப்பட்டுள்ளது என தகவல்
வழங்கப்பட்டுள்ளது.
அரசு
கையகப்படுத்திய காணியில் சுமார் 15 ஏக்கர் மீதமான
காணிகள் அக்கிராமத்தில்
உள்ளன.
0 comments:
Post a Comment