நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக

90 சம்பவங்கள் பதிவு ..
(முழு விபரம் இணைப்பு )

நேற்றைய தொடர்ச்சி.......



46. பைத்துல் முகத்தஸ் தொடர்பாக இஸ்ரேலுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட UNESCO பிரேரணைக்கான வாக்களிப்பில் இலங்கை கலந்துகொள்ளாமை.

47. GSP+ வரிச் சலுகைக்காக முஸ்லிம் தனியார் சட்டத்தில் அரசாங்கம் கை வைத்தமையை எதிர்த்து ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜாமாத் செய்த ஆர்பாட்டத்திற்கு கோட்டை புகையிரத நிலையம் வரை செய்வதனை பொலிசார் தடை செய்தமை.

48. 03.11. 2016 அன்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜாமாத் செய்த ஆர்பாட்டத்திற்கு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து சின்ஹலே என்ற இனவாத குழு நபர்கள் மட்டும் ஒன்று கூடி முஸ்லிம்களைசக்கிலி முஸ்லிம், ஆயுதங்கள் அனைத்தும் தற்போது கொண்டுவந்துள்ளோம், முஸ்லிம்களை கொன்று விடுவோம், தற்கொலை தாக்குதல் நடத்தி முஸ்லிம்களை கொன்று விடுவோம்என பகிரங்கமாக ஊடங்கள் முன்னிலையில் கொலை அச்சிறுத்தல் விடுத்தமை. இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

49. 04.11.2016 திகதி இரவு சுமார் 11. 30 மணியளவில் குருணாகல், தெலியாகொன்ன, கண்டி வீதியில் அமைந்துள்ள தெலியாகொன்ன ஜும்ஆப் பள்ளிவாசல் மீது சில விஷமிகளால் கல்வீச்சுத் தாக்குதலுக்கு உள்ளாக்கப் பட்டமை.

50. 06.11.2016 குருநாகல் மாவட்டத்தின் நிகவெரட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீது 6 பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது

51. திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவில் முள்ளிப்பொத்தானை கிராமத்தில் 95ம் கட்டையில் உள்ள முகைதீன் ஜும் ஆப் பள்ளிவாயலுக்கு 15.11.2016 ஆம் திகதி பின்னிரவில் கல்வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டது.

52. 15.11.2016  பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொட அத்து ஞானசாரதேரர், தௌஹீத் ஜமாத் அமைப்பின் செயலாளர் ராசிக்கை கைதுசெய்யாவிட்டால் கொழும்பு மாளிகாவத்தையில் இரத்த ஆறு ஓடும் என்று எச்சரித்தார்.

53. GSP+ வரிச்சலுகைக்காக நல்லாட்சி அரசாங்கம் முஸ்லிம் விவாக தனியார் சட்டத்தில் கைவைப்பதை எதிர்த்து ஆர்பாட்டம் செய்து, ஞானசார தேரருக்கு எதிராக கருத்து தெரிவித்ததால்  சிறிலங்கா தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிக் மாளிகாவத்தை பொலிசாரால் 16.11.2016 கைது செய்யப்பட்டு பதின்நான்கு நாட்கள் ரிமான்ட் செய்யப்பட்டார்.
54. 17.11.2016   இலங்கையின் நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 32 பேர் சிரியாவிற்கு சென்று .எஸ். பயங்கரவாத அமைப்புடன் இணைந்து கொண்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென்று நீதியமைச்சர் விஜேயதாஸ இன்று -18- பாராளுமன்றத்தில் தெரிவித்தார். குர்ஆன் மதரசாக்களுக்கு ஒரு சில நாடுகளில் இருந்து  மார்க்க உபதேசகர்கள் பேருவளை, கல்முனை, கல்லேலியா மற்றும் குருணாகல் ஆகிய பிரதேசங்களில்  வந்து பிள்ளைகளை மூளை சலவை செய்து அடிப்படைவாதத்தை கற்றுக்கொடுக்கின்றனர். இஸ்லாமிய இயக்கக்ன்கலான தப்லீக் ஜமாஅத், ஜவ்ஹீத் ஜமாஅத், சுன்னத்வல் ஜமாஅத், ஜாமாதுள் இஸ்லாம் ஆகிய அமைப்புக்களை பகிரங்கமாக பாராளுமன்றத்தில் விமர்சித்து கருத்துத் தெரிவித்தமை
55. 19.11.2016  இந்த நாட்டு சொத்துக்கள் தமிழனுக்கோ, முஸ்லிம்களுக்கோ சொந்தமானவை அல்லஅவர்கள் கள்ள தோணிகள் என பகிரங்கங்கமாக ஊடகங்களில் சவால் விடுத்தார் ஞானசார தேரர்.

56.  19.11.2016  பௌத்த மதத்தை பாதுகாப்போம்" என்ற தொனிப்பொருளில் பௌத்த அமைப்புகள் ஒன்றிணைந்து ஏற்பாடுசெய்த பேரணி கண்டியில் நடைபெற்றதுகெட்டம்பே மைதானத்தில் பி.. 2.30 மணியளவில் ஒன்றுகூடிய பௌத்த அமைப்பினர் 1000த்திற்கும் அதிகமானவர்கள்  அங்கிருந்து தளதா மாளிகை நோக்கி பேரணியாகச் சென்றனர். அந்த பேரணியில் ஞானசார தேரர் உற்பன அனைத்து இனவாத இயக்கங்களும் பங்கு பற்றின. முஸ்லிம்களுக்கும் முஸ்லிம்களின் வியாபாரத்துக்கு  எதிராகவும் NOLIMITE, FASIONBUG, ETISLATE ஆகியவைகளுக்கு எதிராகவும்  துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
57. 19.11.2016  அன்று  பேரணியாகச் சென்றவர்கள் கண்டி லைன் பள்ளி வீதியின் தொடக்கத்திலுள்ள பெயர்ப்பலகை சேதமாக்கி அதில் பௌத்தகொடியை ஏற்றினர். அத்துடன் பேரணியில் முஸ்லிம்களுக்கெதிராக வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுலோகங்களை ஏந்தியிருந்ததுடன் இனவாதாக்  கோஷங்களையம் எழுப்பினர்.
58. 19.11.2016 இனவாத பிரசுரம் வெளியாகி, சில மணித்தியாலங்களில் பெஷன்பக் தீப்பற்றி தீ பற்றி எரிந்தது. 30 கோடிக்கு மேல் பெறுமதியான பொருட்கள் எரிந்து தீயில் கருகி போனது. அங்கு பொருத்தப்பட்டிருந்த CCTV கமெராக்களின் பதிவு பொலிசாரால் வலுக்கட்டாயமாகக் கொண்டு செல்லப்பட்டது. இதன்போது, அங்கு வேலைசெய்யும் ஊழியர் ஒருவர் பொலிசாரின் தாக்குலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
59. 25.11.216 களுத்துறை, மஹா ஹீனட்டியங்கல பிரதேசத்தில் அமைந்துள்ள ஜும்மா பள்ளிவாசல் மீது நள்ளிரவு சுமார் ஒரு மணியளவில் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது.
60.  01.12.2016 அக்கரைப்பற்று, ஆலங்குளம் வீதியில் திகவாபி சந்திக்கு அருகில் யணித்த முஸ்லீம்கள் மீது நண்பகல் 12.30 மணியிலிருந்து  மது போதையில் இருந்த கும்பலால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
61.  01.12.2016 திருகோணமலை வான்எல, பனிச்சங்குளம் சின்ன பள்ளிவாசலுக்குள் உட்புகுந்த இனந்தெரியாத நபர்கள் பள்ளிவாசலில் இருந்த 42 குர்ஆன் பிரதிகளை தீயிட்டு எரித்து நாசப்படுத்திச் சென்றனர்.
62.  06.12.2016 முல்லைத்தீவு வலயக்கல்வி அலுவலகத்திற்குற்பட்ட தண்ணீரூற்று மு..வித்தியாலயத்தில் சாதாரன தரப்பரீட்சைக்குத் தோற்றிய முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்துகொண்டு பரீட்சை எழுதுவதற்கு தடைவிதிக்கப்பட்டது.

63.  06.12.2016 முள்ளிப்பொத்தானை சிங்கள  மகா வித்தியாலயத்தில் சாதாரன தரப்பரீட்சைக்குத் தோற்றிய முஸ்லிம் மாணவர்களை திடீர் என பரீட்சை எழுத, பெரும்பாண்மை இனத்தை சேர்ந்த பரீட்சை மேற்பார்வையாளர்கள் பிரச்சினைப்படுத்தியுள்ளனர்.

64.  08.12.2016 பாணந்துறை பாலிகா பாடசாலையில் சாதாரன தரப்பரீட்சைக்குத் தோற்றிய முஸ்லிம் மாணவிகள் பரீட்சை நிலையமான, குறித்த பாடசாலைக்குச் சென்றபோது மேற்பார்வையாளரால் பர்தா கழட்டுவதற் வற்புறுத்தப்பட்டுள்ளனர். அத்தோடு மறு நாள் பரீட்சைக்கு பர்தா அணியாமல் வரும்படியும் கூறப்பட்டுள்ளது.
65. 29.12.2016 அக்கரைப்பற்று பிரதேச எல்லையிலுள்ள, திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில், பொத்தானையில், தொல் பொருள் ஆராய்ச்சி பிரதேசம் எனக்கூறி, 250 வருடங்கள் பழமைவாயந்த அமீருல் ஜப்பார் ஹமதானி பள்ளிவாசலும், அதனுடன் இணைந்த சியாரமும் பிரகடனம் செய்யப்பட்டது. அத்துடன் வெளியார் எவரும் பிரவேசிக்கவும் தடை செய்யப்பட்டது.
66. வில்பத்து சரணாலயம் விஸ்தரிக்கப்பட்டு வனஜீவராசிகள் வலயமாக அந்தப் பிரதேசம் பிரகடனப்படுத்தப்படுவதற்காக ஜனாதிபதியால் உத்தரவு  பிறப்பிக்கப் பட்டதால் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து.

67.  18.01.2017 ஏறாவூர் தாமரைக்கேணி பிரதேசத்தில் அமைந்துள்ள அக்ஸா மஸ்ஜித் எரிப்பு ஏறாவூர் தாமரைக்கேணி பிரதேசத்தில் அமைந்துள்ள அக்ஸா மஸ்ஜித் என்னும் சிறிய பள்ளிவாசல் நண்பகல் உடைத்தெரியப்பட்டு தீவைக்கப்பட்டுள்ளது.
68. 21.01.2017 கண்டி, கெளிஓய, எல்பிட்டி  பிரதேசத்தில் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான காணியில் திடீரென புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டது
69.  09.02.2017 தம்புள்ளை நகரில் முஸ்லிம் வர்த்தக நிலையங்களை மூடுமாறு   கார் ஒன்றில் வந்த குழுவினர் கடும் தூசன வார்த்தைகளால் திட்டி அச்சுறுத்தல் விடுத்தனர். அதனை தொடர்ந்து அங்கு சகல முஸ்லீம் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டது
70. 21.02.2017 தம்புள்ளையிலுள்ள முஸ்லிம் வியாபாரிகளுக்குஇறுதி எச்சரிக்கைஎன்று குறிப்பிட்டு தம்புள்ளை நகரில் துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. அந்தத் துண்டுப்பிரசுரத்தில்வியாபாரம் செய்வன்றால் வியாபாரம் செய்யுங்கள். இல்லையென்றால் பள்ளி. இவ்வாறில்லாவிடில் உங்களுக்கு ஒன்றுமில்லாமல் போகும்எனக் குறிப்பிடப்பட்திருந்தது
71. 19.02.2017 தம்புள்ளை பள்ளிவாசலை புதிய இடத்தில் நிர்மாணித்துக் கொள்வதற்காக 20 பேர்ச் காணி வழங்குவதற்கு உறுதி வழங்கியுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தம்புள்ளை நகரில் கையொப்பம் சேகரிக்கும் வேலைத்திட்டமொன்று நடத்தப்பட்டது
72.  30.3.2017 முசலிப் பிரதேச  முஸ்லிம்களின் வாழிடங்களை உள்ளடக்கி ஒரு லட்சம் ஏக்கர் காணியை வன இலாக்காவுக்காக ஒதுக்கி வர்த்தமானி வெளியிடப்பட்டது 
73.  22.3.2017  கொழும்பிலிருந்து நொச்சியாகமை வரை சென்ற பிக்குமார்கள் முஸ்லிம்களுக்கு பலவாறும் அச்சுறுத்தல் விடுத்தனர்.
74. முஸ்லிம் பகுதியில் 4 பில்லியன் ரூபாவில், பாரிய மதுபானத் தொழிற்சாலை - 19 ஏக்கர் ஒதுக்கீடு செய்யப்பட்டமை

75.  21.03.2017 பொலன்னறுவை முஸ்லிம் கொலனி பிரதேசத்தில் நல்ல முறையில் இயங்கிக் கொண்டிருந்த சுமார் 150 அரிசி ஆலைகள் இழுத்து மூடப்பட்டது

76. 01.03.2017 நாச்சியாதீவு வாழும் தோட்ட தக்கியா பகுதியில் அமைந்துள்ள அரசமரத்தின் கீழ் புத்தர் சிலையை அமைக்க வேண்டும் என இனவாதத்தை தூண்டும் முகமாக  முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
77.   03.04.2017 அனுராதபுர மாவட்டம், நாச்சியாதீவு (வாழுந்தோட்டம் தக்கியா) நோக்கிய (இனவாதிகளின்) பேரணி..!!

78. 18.04.2017  கொடப்பிட்டிய, போர்வை நகரில் அதிகாலை  முஸ்லிம்களின் கடைகள் மீது   பெற்றோல்  குண்டு வீச்சு  தாக்குதல்  மேற்கொள்ளப்பட்டது.
79. 18.04.2017 காலி கோட்டை இராணுவ முகாம் பாதுகாப்பு வலயத்தினுள் கடற்கரையில் அமைந்துள்ள ஷெய்ஹ் ஸாலிஹ் வலியுல்லாஹ் ஸியாரத்தின் பாதுகாப்பு மதில் இனந்தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டது.

80. கம்பஹா மாவட்டம், ஏக்களை பிரதேசத்தில் இனவாதிகளினால் பள்ளிவாசல் புனர்நிர்மாணம் தடைசெய்யப்பட்டமை.

81. 20.04.2017 இறக்காமத்தில், ஆதம் லெவ்வை எனும் தனிநபரின் காணிக்குள் அத்துமீறி புத்தர்சிலை வைத்து விகாரை அமைப்பதற்கு முயற்சிக்கப் பட்டது. (தயாகமகேவின் இனவாதக் குழு) இதை எதிர்த்து ஊர் மக்கள் நீதிமன்றம் வரை சென்று தடை உத்தரவை பெற்றனர்.
82.  நோன்பு மாதம் வருவதனை அறிந்து பேரீச்சம்பழத்திற்கான வரியை அதிகரித்த நல்லாட்சி அரசாங்கம்!

83. 05.05.2017 கலேவெல நகரில் இன்று காலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் சுமார் முஸ்லிம் வார்த்தகருக்கு சொந்தமான கடை உற்பட 3 கடைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது!
84. 13.05.2017 ஊடகங்கள் முன்னிலையில் அல்லாஹ்வையும், அவனது தூதர் (ஸல்) அவர்களையும் கெட்ட வார்த்தைகளினால் ஊடகங்கள் முன்னிலையில்  கொச்சையாக பேசினார்.
85. 15.05.2017 நள்ளிரவு 1 மணியளவில் ஹெல்மட் அணிந்து வேன் ஒன்றில் வருகை தந்த சுமார் 6 முதல் 8 பேர் கொண்ட குழுவொன்று வெள்ளம்பிடிய கொஹிலவத்தையில் அமைந்துள்ள இப்ராஹிமிய்யா ஜும்ஆ முஸ்லிம் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்தியுள்ளது.
86. திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோப்பூர்  நீணாக்கேணி  பிரதேசத்தில் முஸ்லிம்கள்  பூர்வீகமாக பயிர்ச்செய்கை மேற்கொண்டு வசித்து வந்த குடியிருப்புக் காணியை அத்துமீறி பௌத்த யோடு காணியின் பாதுகாப்பிற்காக போடப்பட்டிருந்த வேலிகளை இயந்திரங்களால் உடைத்தெறிந்தனர்.
87. 16.05.2017  திருகோணமலை தோப்பூர் செல்வநகர் நீணாக்கேணி பகுதிக்குள் பௌத்த தேரர்கள் தலைமையிலான பெரும்பான்மை இன கும்பல் செவ்வாய்க்கிழமை இரவு உட்புகுந்து பொது மக்களை தாக்கியுள்ளதோடு 10 குடியிருப்பு வீடுகளை கூரிய ஆயுதங்களினால் தாக்கி பகுதியளவில் சேதமாக்கியுள்ளனர்.
88. 16.05.2017  பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தலைமையிலான சிறு குழு பொலன்னறுவைக்கு திடீர் விஜமொன்றை மேற்கொண்டு பொலன்னறுவை மாவட்டத்தின் முஸ்லிம் தலைக்கிராமங்கள்  நான்கில் ஒன்றான ஓனேகமை வனப்பிரதேசத்துக்குச் சென்று அங்கே முஸ்லிம்களுக்குச் சொந்தமான கால் நடைகள் இளைப்பாற அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை அடித்து உடைத்தனர்.
89. 16.05.2017  பொலன்னறுவை ஓனேகம பகுதிக்கு நேற்று முன் தினம் விஜயம் செய்த பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான பௌத்த குருமாரும் மற்றும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிலரும் அப்பகுதியில் வசிக்கும் முஸ்லிம்களின் மாட்டுத் தொழுவங்கள் மற்றும் கொட்டில்களைக் கழற்றி எறிந்ததுடன் முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் அவதூறாகப் பேசியதாக தெரிவிக்கப்படுகிறது.
90. 2017.05.15 ம் திகதி அதிகாலை 3.00மணியலவில் பாணந்துறை பழை வீதி பஸார் பள்ளிவாயல் மீதுபின்புறமாக உள்ள யன்னல் வழியாக மேல்மாடியின் கண்ணாடியை உடைத்து பெற்றோல் குண்டு வீசி எரியப்பட்டு பள்ளி வாயல் தீப்பற்றி மேல்மடியிற்கு ஏறும் பகுதி சேதம் ஏற்பட்டுள்ளது     -
91. 17.05.2017  பாணந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எலுவில பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான இரு வர்த்தக நிலையங்கள் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதிகாலை 3.30 மணியளவில் பதிவாகியுள்ளது. தொலைத் தொடர்பு நிலையம் மற்றும் அதனுடன் உள்ள மற்றொரு வர்த்தக நிலையம் மீதே இந்த தாக்குதல் நடத்தப்ப்ட்டுள்ளது.
92. 17.05.2017 வென்னப்புவ பிரதேசத்தில் அமைந்துள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான “Last Chance” இலத்திரனியல் காட்சியறை தீக்கரையானது.   வர்த்தக நிலையத்தில் இருந்து சந்தேகத்துக்கிடமான ஒரு லைட்டர் மற்றும் இரண்டு ஸ்குரூவ் டிரைவ்களும் மீட்கப்பட்டுள்ளது.
மேல் குறிப்பிட்ட அனைத்து விடயங்களும் , இன்று நல்லாட்சி முஸ்லிம்களுக்கு கொடுத்த பரிசு. இது தொடர்பாக மேலதிக தகவல்கள் வேண்டும் என்றால் எங்கள் காரியாலயத்துக்கு சமூகமளிக்குமாறு வேண்டிக்கொள்கிறோம்.

இந்த தகவல்கள் அனைத்தும்   பத்திரிகைகள்தொலைக்காட்சி செய்திகள்இலங்கையிலுள்ள முன்னணி இணையத்தளங்கள் - சஞ்சிகைகள்வானொலி செய்திகள் மற்றும் அப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களால் எங்கள் காரியாலயத்துக்கு ஆதார பூர்வமாக சமர்பிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையின் மூலம் உங்கள் சமர்பிக்கிறோம்.
தெரிவிப்பது நாங்கள்......! தீர்மானிப்பது  நீங்கள்......!

தொடரும்.................. 

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top