வெள்ளவத்தையில்கட்டடமொன்று இடிந்து விழுந்த அனர்த்தம்:
காயமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு
கொழும்பு-06, வௌ்ளவத்தை சவோய் திரையரங்குக்கு அருகிலுள்ள புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடமொன்று இடிந்து விழுந்ததில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை, 23ஆக அதிகரித்துள்ளதாக, களுபோவில மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலைகளின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் இருவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக, அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இந்த அனர்த்தத்தில் மேலும் பலர் சிக்கியுள்ளனரெனவும் தெரிவிக்கப்படுகின்றது.



0 comments:
Post a Comment