அம்பாரை மாவட்ட சர்வ சமய சம்மேளனம்


ஊடக அறிக்கை


அம்பாரை மாவட்ட சர்வ சமய சம்மேளனம் கடந்த ஒரு தசாப்தமாக இனங்களுக்கும் சமயங்களுக்குமிடையில் சமாதனத்தையும் சகவாழ்வையும் மேம்படுத்துவதற்காக பல் வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு பல வெற்றிகரமான அடைவுகளைக் பெற்றுள்ள நிலையில் இம்மாவட்டத்தின் சில பிரதேசங்களிலும் நாட்டில் பொதுவாகவும் சமய தீவிரவாதச் செயல்கள் தலை தூக்கி வருவது கவலையளிக்கின்றது.
30 வருடகால யுத்தத்தின் பின் நாட்டில் சமாதானத்தை மக்கள் ஆவலோடு வரவேற்று வாழ்ந்து கொண்டிருந்த வேளை சமய தீவிர வாதிகளின்  செயற்பாடுகள் காரணமாக பல அழிவுகளும் அவலங்களும் ஏற்பட்டன. அதே போன்று தற்போதைய அரசு நாட்டில் சமாதானம், சக வாழ்வு,மனித உரிமைகள் போன்றவற்றிர்க்கு முன்னுரிமையளித்து வரும் வேளையில் மீண்டும் சமய தீவிர வாதம் தலை தூக்கியுள்ளது.
சமயத் தலைவர்களும் மக்களும் தத்தமது சமயங்கள் கூறும் நற்பண்புகளைப் பேணுவதற்குப் பதிலாக ஏனைய சமயங்களை விமர்சிப்பதிலும் ஏனைய இன மக்களை இம்சைப்படுத்துவதிலும் அக்கறை காட்டுவது சமயத்தை தமது இதயத்தில் வைத்திருப்பதற்குப் பதிலாக தலை மேல் சுமந்து திரிவதற்கு ஒப்பாகும். இதனை அரசும் நாட்டின் சமயத் தலைவர்களும் புத்திஜீவிகளும் வெளிப்படையாகக் கண்டித்து உரிய நடவடிக்கைளில் தீவிரமாக இறங்க வேண்டும். மாறாக, இந்நிலை தொடருமாயின் எமது நாடு சர்வதேசத்தில் இழிவாக நோக்கப்படும்.
அதே வேளை எல்லா இன மக்களும் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற உணர்வுடன் நாட்டின் முனனேற்றத்திலும் நலத்திலும் அக்கறையுள்ளவர்களாகவும் தத்தமது சமயங்களுக்குள் ஒற்றுமையாகவும் தமது சமயங்கள் கூறும் நல் விழுமியங்கள் வழியில் தமது வாழ்வொழுங்கை வகுக்க வேண்டும். ஏனைய சமயச் சடங்குகளையும் மக்களின் மனித உரிமைகளையும் உணர்வுகளையும் மதித்து பொறுமையுடனும் சகிப்புத்தன்மையுடனும் வாழப் பழக வேண்டும். சமயங்களின் அதியுயர்பீடங்கள் பிழையாகச் செயற்படும் சமயக்குருமாரையும் ஏனைய சமயச் செயற்பாட்டாளர்களையும் கண்டித்துத் திருத்த வேண்டும் எனவும் இச் சம்மேளனம் வேண்டுகின்றது.

டாக்டர் எம்..எம.; n;ஜமீல்                          விபுலமாமணி வீ.ரீ.சகாதேவராஜா
தலைவர்                                                                                செயலாளர்;



Press Release

IRFAD was promoting peace and co-existence among different communities and religious groups in Ampara district for the last one decade and was able to re- build friendship and unity among the people who were separated due to Elam war.
When the whole country was happy to breathe peace after the end of the war during the previous government, religious extremists started hate speech and violence against minorities that resulted in major destructions and killings in certain parts of the country.
Now again when the present government is pursuing peace, co-existence and human rights in the country, the religious extremists are hell bent on criticizing other religions and threatening minorities through violent activities. They have no regards for the moral values taught by their own religions. This is like carrying their religion on the head rather than carrying in the heart. We urge the government as well as sober religious leaders and intellectuals to come forward openly to stop this scourge.
In the meantime, all the people living in Sri Lanka should behave as loyal citizens and co-operate in the nation building unitedly. They should discipline their life style according to the moral values taught by their own religions. They should respect the rituals of other religions and the human rights and feelings of other people. Otherwise our country will be looked down in the inter-national arena. We kindly request the highest religious bodies to warn the monks and other religious practitioners not to indulge in extremism and violence.

DR.M.I.M.Jameel                                                                                             Vipulamamani V.T.Sahadevarajah
President                                                                                                                            Secretary
Contact: 0773 725 625                                                                                 Contact:0776965343
Email: mimjam@gmail.com                                                                         email: vtsaha@gmail.com


Address: 06,Hospital Rd.,Sainthamaruthu -09 # 32280

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top