முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு
முஸ்லிம்களுக்கெதிரான
சமகால பிரச்சினைகள்
தொடர்பில் ஆராய
முஸ்லிம் பாராளுமன்ற
உறுப்பினர்களுடனான விசேட கூட்டமொன்று
தபால் மற்றும்
முஸ்லிம் விவகார
அமைச்சில் நடைபெற்றது.
இச்சந்திப்பில்,
முஸ்லிம் விரோத செயற்பாடுகளால் தற்போது முஸ்லிம்கள் மத்தியில் நிலவும் அசாதரண சூழ்நிலை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் இவ்விடயங்களை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்து, அவற்றுக்கான தீர்வினைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கு இணக்கம் காணப்பட்டது.
தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தலைமையிலான இந்த கூட்டத்தில் அமைச்சர்களான ரவுப் ஹக்கீம், பைசர் முஸ்தபா, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், எம்.ஐ.எம். மன்சூர், எம்.எச். எம். நவவி, எஸ்.எம். மரிக்கார், இஷாக் ரஹ்மான் ஆகியோர் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
0 comments:
Post a Comment