யார் இந்த ஞானசார?
பொதுபலசேனாவின் வரலாறும் அதன் தாக்கமும்
2015ம் ஆண்டு இறுதிப் பகுதியில் சிலோன் முஸ்லிம் பிரதம ஆசிரியர் பஹத் ஏ.மஜீத் அவர்கள் எழுதிய புலனாய்வு கட்டுரை காலத்தின் தேவை கருதி மீள பிரசுரிக்கப்படுகிறது.
இந்தியாவின் பல்கலைக்கழகமொன்றின் இதழியல் சிறப்பு கற்கைநெறியில் புலனாய்வுஊடகவியல் சிறப்புச் சான்றிதழுக்கு தொகுத்த தரவுகளின் அடிப்படையில் பொதுபலசேனா அமைப்புபற்றியும் இலங்கை ஆட்சிமாற்ற அரசியலில் பொதுபலசேனவின் முக்கிய கதாபாத்திரத்தையும் கட்டுரையாய் எழுதியுள்ளேன்.
'பஞ்ஞாயத்து முறை'
சிங்கள மக்கள் மத்தியில் ஊர் பிணக்குகளை தீர்ப்பதற்காக காணப்பட்ட பஞ்சாயத்து நடைமுறைகளுள் ஒன்றான 'பன்சல பஞ்சாயத்து' இன்றும் பின்தங்கிய கிராமப்புற சிங்களப்பகுதிகளில் காணப்படுகிறது. இது விகாரைகளில்; தான் செயற்படுத்தப்படுகிறது. குடும்பச் சண்டைகள் முதல் ஊர் சண்டை வரை இங்கு விசாரிக்கப்பட்டு தீர்த்து வைக்கப்படுவதோடு மீறுகிற சந்தர்ப்பத்திலேதான் பொலிஸ் நிலையங்களுக்கோ அல்லது நீதிமன்றங்களுக்கோ வழக்குகள் செல்லுகிறது. குறிப்பாக இலங்கையின் தென்மாகாணத்தில் காணப்படும் கிராமங்களில் இருக்கும் விகாரைகளில் அதிகமாக இந்த பஞ்சாயத்து முறைமைகள் காணப்படுகிறது. நாட்டில் சிங்கள மக்கள் வாழ்கின்ற ஏனைய பின் தங்கிய கிராமப்புற விகாரைகளிலும் இந்த நடைமுறை காணப்படுகிறது.பௌத்தம் ஒரு மதமல்ல, புத்தர் ஒரு தூதருமல்ல. இது மனிதன் மனிதனாக வாழ்கின்ற முறையினை தெளிவாக சொல்கின்றது. புத்தர் இந்த வழிகாட்டியினை வாழ்ந்துகாட்டியவர் இதனாலையே இவரை கைகூப்பி மண்டியிட்டு வணங்குகின்றனர், பௌத்தத்தை பின்பற்றுகின்றவர்களுக்கு கொள்கைகள் மார்க்க வழிமுறைகள் ஒன்றுமில்லை, இது வெளிப்படையாக தெரியாவிட்டாலும் இதுதான் உண்மையும் கூட, நல்ல பழக்கங்களை சொல்லிக்காட்டிய வாழ்ந்து காட்டிய மகான் தான் கௌதம புத்தர்.மரணத்தின் பின்னரான வாழ்க்கை, மார்க்க சட்டங்கள் என்பன இல்லாமலே இவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக இலங்கையில் வாழும் பௌத்தர்களுள் மிகவும் பின்தங்கியுள்ளவர்களே கிராமங்களில் வாழ்ந்து வருகின்றனர், மத்திய மாகாணங்களில் வாழும் பௌத்தர்கள் மன்னர் பரம்பரை ஆகையால் இவர்களுக்கென்று தனியான வழிமுறைகளை பின்பற்றி பௌத்தர்களில் உயர்ந்தவர்களாக காட்டிக்கொள்கிறார்கள்.
'மஹானாம பௌத்தர்கள்'
பின்தங்கிய கிராமங்களில் வாழும் பௌத்தர்கள் அதாவது தென்மாகாணத்தில் அதிகப்படியான மஹானாம பௌத்தர்கள் வாழ்கின்றனர், மாற்றுமத சகோதரர்களை வேற்றுக் கண்கொண்டு பார்ப்பது குணம்; இவர்களிடம் அதிகமாக காணப்படுவதாக 'டிராக்' என்று சொல்லப்படும் ஒரு சர்வதேச அமைப்பு கூறுகிறது.
இப்பகுதியில் உள்ள அதாவது மஹானாம பௌத்தர்கள் வாழும் பிரதேச விகாரைகளில் தற்காப்புக்கலைகள், ஆயுதப்பயிற்சி (வாள் வெட்டு, அம்பு எறிதல்) போன்ற விடயங்கள் சொல்லிக்கொடுக்கப்படுகிறது. இது பாரம்பரிய வழிமுறையும் கூட அடிப்படையில் திடகாத்திரம் கொண்ட இவர்கள் தீவிர பௌத்த போக்கு கொண்டவர்களாக காணப்படுகின்றனர். இவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமை, பிக்குகளை உன்னதமாய் மதிக்கும் குணங்கள் இவர்களை இன்னும் பௌத்தத்தினை அதிகமாக பின்பற்றுவதற்கு வழிகோலியாக அமைந்துவிடுகிறது.இந்த அடிப்படையில் இலங்கையில் பல அமைப்புகள் காலத்திற்கு காலம் ஆரம்பிக்கப்பட்டு இல்லாமல் போன அமைப்புக்கள் ஒருபுறமிருக்க மஹானாம பௌத்தர்களின் சார்பாக அமைப்புக்கள் இல்லாமைலே விகாராதிபதிகளினால் ஒரு வட்டத்திற்குள் தள்ளப்பட்ட அடிப்படைவாத சிங்கள பௌத்தர்கள் வெளியில் வர தயங்கினார்கள், கண்டிய கொள்கைளுக்கும் பிக்குமார்களின் நெறியாழ்கைகளுக்கும் கட்டுபட்டு வாழ்ந்து வந்தனர்.
'யார் இந்த ஞானசார தேரர்'
மஹானாம பௌத்த வம்சத்தை சேர்ந்த களுத்துறையில் ஒரு பின்தங்கிய குடும்பத்தில் 1975ம் ஆண்டு மார்ச் மாதம் 4ம் திகதி பிறந்த ஞானசார தன்னை ஆரம்பத்திலிருந்து சிங்கள பௌத்தத்தை காப்பாற்றும் ஒரு பிக்குவாக காட்டிக்கொள்ளும் அளவிற்கு தன்னுடைய நடவடிக்கைகளை மாற்றிக்கொண்டார். பஞ்சாயத்து முறைகளில் தலையிடுவது சிறிய சிறிய அமைப்புக்களை ஒன்றாக்கி வலயமைப்புக்களை பெரிதாக்குவதில் வல்லவர் ஆனார். தன்னுடைய படிப்பினை வெளிநாடுகளில் மெருகூட்டிய ஞானசார இலங்கையின் அடிப்படைவாத சிங்கள பௌத்தப்போக்குள்ள முக்கிய தனவந்தர்களை இனம் கண்டுகொண்டார், அவர்களை தன் வலையில் முடக்கி சாதனை புரிந்தார்.'ஞானசாரவுக்கு எதிரியான முஸ்லிம்கள்' இலங்கையில் பௌத்த மத்தினை பாதுகாக்க வேண்டும் என்று எண்ணிய காலப்பகுதியில் தலைதூக்கிய 'தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதிக்கம்' சிங்கள பௌத்தர்களை கோபத்திற்குள்ளாக்கியது, தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு முஸ்லிம்கள் சில சந்தர்ப்பங்களில் தஞ்சம் கொடுத்த அல்லது காட்டிக்கொடுக்காமல் விட்டதை மிகவும் கோபமாக பார்த்த அடிப்படைவாத இனவாதிகள் முஸ்லிம்களும் எங்களுக்கு விரோதிகள் தான் என்று முடிவெடுத்தனர். இது ஒரு சில குழுக்கள் எடுத்த முடிவுகளாக இருந்தாலும் ஏனைய முஸ்லிம்களை சகோதரர்களாக பார்த்த வரலாறுகள் அதிகம், இந்த எதிரியாக பார்த்த பிக்குகளில் ஞானசாரவும் ஒருவர்.இதற்கு பலநூறு காரணங்கள் உண்டு, நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட காலப்பகுதியில் வியாபார நோக்கத்திற்காக வந்தவ அரேபிய நாட்டு முஸ்லிம்கள் வலிமையுள்ளவர்களாகவும், வியாபார யுக்தி கொண்டவர்களாகவும் இருந்த காரணத்தினால் மன்னர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் பிடித்துப்போய்விட்டனர். அக்காலம் தொட்டு இன்றுவரை ஆட்சியாளர்களுக்கு துணையாக இருந்தவர்கள் முஸ்லிம்கள், அரேபிய முஸ்லிம்கள் சிங்கள பெண்களை மணந்ததின் காரணமாக தங்கள் மார்க்கத்தை தங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க முடியாமல் தவித்த வேளை சிங்கள மன்னர்களின் உதவியுடன் தமிழகத்திலிருந்து வந்த தமிழ்பேசும் முஸ்லிம்கள் இலங்கையில் பிறந்த கலப்பு மத இஸ்லாமியர்களுக்கு இஸ்லாத்தை கற்றுக்கொடுத்தனர், இது தான் இன்று கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம்கள் சரளமாக தமிழ் பேசவும் செய்கின்றனர். இது ஒரு புறமிருக்க முஸ்லிம்கள் பணத்திலும் அறிவிலும் மேலோங்கி காணப்படுவதைனை பொறுத்துக்ககொள்ளாத ஞானசார இதனை தடுப்பதற்கு பல வழிகளிலும் உதவிதேடிய வேளை நோர்வே மற்றும் மேலைத்தய கொள்கை நாடுகள் ஞானசாரவிற்கு தீனியாக மாட்டியது.
'நோர்வே நாட்டின் எடுபிடியான ஞானசார'
ஒரு அரசசார்பற்ற நிறுவனத்தினை தன்னுடைய விகாரை மூலமாக செயற்படுத்தி வந்த ஞானசாரவை கவ்வியது நோர்வே, ஆப்கானிஸ்தானில் தீவிரவாதத்தை உருவாக்க அந்நாட்டு மத அமைப்புக்களுக்கு ஆரம்பத்தில் சமூக சேவை என்ற அடி;படையில் நிதியுதவி வழங்கி நாட்டுக்குள் மேற்கத்தைய கொள்களை கொண்டுவந்து சிதறவைத்து அந்நாட்டு மத வழிமுறைகளை சீர்குலைத்து இறுதியில் தீவிர வாதத்தை தோற்றுவித்து யுத்தங்களை தூண்டி அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து ஆயுதங்களை விற்று இலாபம் தேடுவதுதான் இந்த நோர்வேயின் திட்டம், திட்டமறியாத ஞானசாரவும் ஒட்டிக்கொள்ள ஆரம்பிக்கிறது சிந்தனை யுத்தம். தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை வீழ்த்த தயாரான அமெரிக்கா திட்டத்தை தீட்டியது நோர்வே மூலமாக அதற்கு எடுபிடியானார் ஞானசார.30 வருடகால யுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவந்து நாட்டினை சமாதான பூங்காவாக மாற்றி நாட்டு மக்களை சந்தோசமாக வாழவைத்த சந்தர்ப்பத்தில் அபிவிருத்திகளும் மேற்கத்திய நாடுகள் தவிர்ந்து ஒப்பந்தங்கள் அடிப்படையில் நடைபெற்றுக்கொண்டிருப்பதை சகித்துக்கொள்ள முடியாமல் தவித்தது அமெரிக்கா
.'மஹிந்தவிற்கு ஆப்புவைத்த அமெரிக்காவும் கூடவே இருந்த ஞானசாரவும்'
சிங்கள அரசாங்கம் மலர்ந்தபோது ஈழப்பிரச்சினையை உருவாக்கி அதன் மூலம் குளிர்காய்ந்த இந்தியா அதனை முடிக்க தத்தளித்துகொண்டிருந்த வேளை, அமரிக்கா தான் தாயரித்த ஆயுதங்களை விற்பனை செய்ய, இருக்கும் பிரச்சினையை தூண்டி ஆயதப்போராட்டமாக மாற்ற அன்றும் நோர்வேயுடன் கைகோர்த்து, 'அன்டன் பாலசிங்கம்' எனும் புரோக்கர் மூலம் தமிழீழ விடுதலைப்புலிகைள தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டது.இதற்கு வழிவிட்டவர்கள் ரணிலும், சந்திரிக்காவும் என்றால் மிகையாகாது. சுமாதான ஒப்பந்தம் என்று இடம்கொடுத்து புலிகளின் ஆயுதப்பலத்தை அதிகரிக்க செய்த ரணில் அமெரிக்காவின் கைக்கூலி என்பது அன்று புலனாகியது. இதனை தடுக்கமுடியாமல் தவித்த சந்திரிக்கா அம்மையாரை கொன்று பதவியேறலாம் என்று நினைத்த படலமும் காலம் கடந்ததது.சந்திரிக்கா அம்மையாரும் உயிர் தப்பினார். மீண்டும் இராணுவத்தினர் யுத்தத்தை தொடர்ந்தனர். அதற்கிடையில் யாரும் எண்ணியிராத அளவு பிரதமராகி ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஸ நிறைவேற்று அதிகாரத்தினை அதிஉச்சமாக பயன்படுத்தி யுத்தத்pனை முடிவுக்கு கொண்டு வந்தார். இது அமெரிக்காவிற்கு பெரும் பேரிழப்பாகும். உலகின் நம்பர் 1 தீவிரவாத அமைப்பான விடுதலைப்புலிகள் அமைப்பு அதிஉன்னத ஆயுதங்களை தன்னகத்தே வைத்திருந்தது. ஆதனை அமெரிக்காவிடமே கொள்வனவும் செய்ததது. இதற்கு ஆப்புவிழுந்ததனால் இதனை எண்ணி தொடர்ந்தும் மஹிந்த ஆட்சியில் இருந்தால், தெற்காசியாவின் கேந்திர மத்திய நிலையமான இலங்கை நம்மை விட்டு அகன்று ஆசிய நாடுகளிடம் தஞ்சம் புகுந்துவிடும் என்று பயந்தது அமெரிக்கா.இதற்கிடையில் மஹிந்த ராஜபக்ஸ சீனாவிடம் ஒப்பந்தங்கள் செய்து பாரிய அபிவிருத்தி வேலைகளை செய்து விரைவாக நாட்டை அபிவிருத்தி செய்தார்.ஒருமுறை சரத்பொன்சேகாவை ரணிலின் மூலம் தேர்தலில் களமிறக்கி தோல்விகண்ட அமெரிக்காவிற்கு சிறுபான்மை மக்களை சீண்டுவதன் மூலமே மஹிந்தவை தோற்கடிக்கலாம் என்பதே தீர்வு. இலங்கையின் ஜனாதிபதியை தீர்மானிக்கின்ற சக்தியாக இருக்கின்ற தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மக்களை சீண்டி மஹிந்தவை எதிர்க்கச் செய்தால் மாத்திரமே தோற்கடிக்கச் செய்யலாம் என கனவு கண்டது அமெரிக்கா. இதற்கு நோர்வேயின் உதவியினை நாடிய போது ஞானசாரதான் இதற்கு சரியானவர் என்று தீர்மானித்தது. 2014.04.22 அமெரிக்காவிற்கு சமய வழி விஜயமொன்றினை செய்து அங்குள்ள இன்டியானா விகாரையில் சந்திப்புக்களையும் நிகழ்த்தியது அமெரிக்க அரசு, இதன் பிற்பாடு நாட்டுக்கு வந்த பலசேனா நாட்டில் ஏற்கனவே இருந்த பொருளாதார பலத்தினையும், அமெரிக்க பலத்தினையும் பாவித்தது. 'சிலிட்' தனியார் பல்கலைக்கழக பணிப்பாளர் டிலாந்த உட்பட ஏனைய முக்கியஸ்தர்களை தன் வசப்படுத்தியது.
'ஜாதிக ஹெல உறுமயவும் பொதுபலசேனாவும் இணைந்துகொண்டது'
அரசியல் செல்வாக்கற்ற பொதுபலசேனா அமைப்பு இலங்கையில் உள்ள பௌத்த மதவாத கட்சியான ஜாதிக ஹெல உறுமயவை நாடி எதிர்கால அரசியலுக்கு தாங்கள் பணஉதவிகள் செய்கிறோம், இ;ந்த நாட்டில் பௌத்த மதத்ததை காப்பாற்ற வேண்டுமென்று மண்டியிட்டபோது மதவாதம் கொண்ட சம்பிக்க ரணவக்கவும், அத்துரலிய ரத்தினதேரரரும் பொதுபலசேனாவுடன் இணைந்து செயற்பட ஆரம்பித்தனர். ஜனாதிபதியுடன் நெருங்கிய உறவுள்ள சம்பிக்க ஜனாதிபதியுடன் இதுகுறித்து பேசவில்லை அன்று என்பது குறிப்பிடத்தக்கது.
'ஹலால் எதிர்ப்பும் பள்ளிவாசல் தாக்குதலும்'
பொதுபலசேனா தன்னுடைய முழுப்பலத்தையும் பயன்படுத்தி ஹலால் சான்றிதழை இல்லாமல் செய்தது, இது மாத்திரமின்றி முக்கிய பள்ளிவாசல்களை இடமாற்றவும் செய்தது.இது குறித்து விசாரிக்குமாறு முஸ்லிம் அமைச்சர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஜனாதிபதி பணிப்புரை விடுத்த பொழுது சம்பிக்க ரணவக்க ஜனாதிபதியை தொடர்புகொண்டு அச்சுறுத்தியுள்ளார் ' 5000 பிக்குகள் கைவசம் வைத்துள்ள அமைப்பு பொதுபலசேனா' இதனுடன் மோதுவதன் மூலமாக இன்னுமொரு பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.இது பௌத்த நாடு பெரும்பான்மை மக்கள் பௌத்தர்கள். பிக்குகள் தீக்குளிக்கவும் தயாராய் உள்ளனர் நீங்கள் அனுசரித்து போகவேண்டும் என்று கூறினார் சம்பிக்க. பெரும்பான்மை சிங்கள வாக்குகளால் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஸ ஒரு கட்டத்தில் பயந்துபோனார் இதற்கு கோத்தாபய ராஜபக்ஸவை நாடிய போது அதற்கு முதலே பொதுபலசேனா அமைப்பு கோத்தாபய ராஜபக்ஸவை தொடர்புகொண்டு தங்கள் பலத்தினை உறுதிப்படுத்தியது. இதற்குப்பிறகு ராஜபக்ஸ அரசு இதுகுறித்து பேசுவதிலிருந்து தவிர்ந்து கொண்டது, பிரச்சினை வரும் போதெல்லாம் அனுசரித்து பேசிய ஜனாதிபதியும், பாதுகாப்பு செயலரும் முக்கிய கட்டங்களில் முஸ்லிம் அமைச்சர்களுக்கு ஏசியும் தொலைபேசி அழைப்பை துண்டித்தும் உள்ளனர்.
'தொடர்ச்சியான இனவாத தாக்குதல்'
தம்புள்ள பள்ளிவாசல், கொம்பனித்தெரு பள்ளிவாசல், தெஹிவளை பள்ளிவாசல் என்று நீண்டு கொண்டு சென்ற பள்ளிவாசல் தாக்குததல்கள் இறுதியில் இனக்கலவராமாய் தோற்றமளித்தது. அளுத்கம பற்றியெரிந்து, முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டது. இவற்றிற்கெல்லாம் இந்த பொதுபலசேனா அமைப்புதான் காரணம் என்று தெரிந்தும் கூட அமைதிகாத்தது ராஜக்ஸ அரசு, முஸ்லிம் அமைச்சர்கள் களத்திலும் பாராளுமன்றத்திலும் பேசியும் பலனில்லை என்று தெரிந்தும் கூட முஸ்லிம்களை இன்னுமொரு அழிவிலிருந்து பாதுகாக்க அவருடன் இருக்கவேண்டிய தேவை ஏற்பட்டது. அமைச்சரவை அந்தஸ்துள்ள முஸ்லிம் அமைச்சர்கள் தவித்தனர் செய்ய வழியின்றி!
'சமூகவலைத்தளங்களில் பற்றியெரிந்த இனவாதச் சிக்கல்'
ஒருபுறம் சிங்கள சகோததர்கள் பொதுபலசேனாவிற்கு ஆதரவாகவும், எதிர்த்து பதிவுகளை ஆதாரங்களுடன் பதவிட்டனர். இதே வேளை சமூக வலைத்தளங்கள் மூலம் கடைத்த தகவல்களை திரிவு படுத்தி செய்திகளை வெளியிட்ட இணையத்தளங்கள் தங்கள் இணையத்தை பிரபலப்படுத்த பேஸ்புக் பக்கத்தின் லைக்குகளை அதிகரிக்க நினைத்தவாறு செய்திகளை பதிவிட்டது. இது சாதகமாய் போனது பொதுபலசேனாவிற்கு, தாங்கள் நினைத்ததை விட அதிகம் பிரபலம் பெற்றனர்.
'நெகடிவ் அப்றோச் மூலம் பிரபலமான அதே வேளை சர்வதேச ஊடகங்களின் வலையில் மாட்டிய ஞானசார'
சமூகவலைத்தளங்களில் பிரபலமான ஞானசார சர்வதேச ஊடகங்கள் கண்ணில்பட்டார், பிரச்சினையில் மாட்டிக்கொண்டார், உலகம் பொதுபலசேனாவின் அட்டகாசத்தை திரும்பிப்பார்த்தது. ஆனால் இதனால் பொதுபலசேனா அமைப்பு ஒரு தீவிரவாத அமைப்பாக பார்க்கப்பட்டது.
TRAC எனப்படும் அமைப்பு பொதுபலசேனாவை ஒரு தீவிரவாத அமைப்பாக உலகிற்கு அறிமுகப்படுத்தியது. தட்டுத்தடுமாறி பிற்பட்ட காலத்தில் முஸ்லிம்கள் தங்களுக்கு எதிரியல்ல முஸ்லிம் அமைப்புகள் தான் எதரி என்று தட்டிமாறியது பொதுபலசேனா,
'ஊடகவியலாளர் மாநாடு நடத்தி ஊடகங்களை கேக் கொடுத்து மடக்கிய ஞானசார'
வாரமொறு ஒரு ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி செய்திப்பஞ்சமான ஊடகங்களுக்கு இனவாத தீனி போட்டது பொதுலசேனா அமைப்பு, வரும் ஊடகவியலாளர்களுக்கு ரோலஸ்சும், கேக்கும் டீயும் கொடுத்து சிரித்துப்பேசியது. ஒரு சில வேளை கொடுப்பனவுகளும் வழங்கியது. இதுவே அடிக்கடி பொதுபலசேனாவை ஊடகங்கள் துாக்கிப்பிடித்ததற்கு காரணம்.
'முஸ்லிம் மக்களின் கோபத்திற்குள்ளான முஸ்லிம் அமைச்சர்கள்'
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், அதாஉல்லாஹ், ரிசாத் பதியுதீன், பௌசி போன்றோர் காரணம் தெரிந்தும் வெளியில் சொன்னால் இன்னும் முஸ்லிம் மக்களுக்கு ஆபத்து என்று சொல்லாமலே வாய்மூடி மௌனிகளாகினர். இதற்கு மஹிந்த பொறுப்பல்ல என்று அமைச்சர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெரிந்திருந்தும் கூட முஸ்லிம் மக்கள் மத்தியில் நியாயப்படுத்த முடியாமல் தடுமாறிய வேளை மக்களும் மறந்தனர் ஆட்சியாளர்களும் மறந்தனர். ஆனால் இனாவத பிரச்சினைகளை தடுக்கவும் முடியாது அதனை வரவிடாமல் பண்ணிவிடவும் முடியாது இது நியதியும் கூட!
'ராஜபக்ஸ ஆட்சிமீதும் அவர் சகாக்கள் மீதும் கோபம்கொண்ட முஸ்லிம்கள்'ஏற்கனவே தமிழ் மக்கள் ராஜபக்ஸ அரசாங்கம் மீது கோபம் கொண்டிருக்கிற அதே வேளை முஸ்லிம்களும் 'பொதுபலசேனா' வின் மூலம் ராஜபக்ஸ மீது கோபம் கொண்டனர். இனி மஹிந்தவை ஆதரிப்பதில்லை என்று முடிவு எடுத்தனர். இந்ந சூழ்ச்சி அறியாத மஹிந்த மற்றுமொரு ஜனாதிபதி தேர்தலுக்கு தயரானார்.
'திட்டத்தில் வெற்றியீட்டிய அமெரிக்காவும் நோர்வேயும்'
தங்கள் வகுத்த வியூகம் வெற்றியடைந்ததை தொடர்ந்து ஞானசாரவையும் பொதுபலசேனாவையும் கைவிட்டது அமரிக்கா. நோர்வேக்கு நன்றி சொல்லிய அதே வேளை ஐக்கிய தேசியக்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்ஹவை சந்தித்து அமெரிக்கா. தங்கள் திட்டம் குறித்து விளக்கிய போது நெகிழ்ந் ரணில் என்ன செய்ய வேண்டும் என்று கேட்ட ரணிலுக்கு இடிவிழுந்தது போல் பதில் சொல்லியது அமெரிக்கா ' பொதுவேட்பாளர் தற்போதயை ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன' முஸ்லிம் கட்சிகள், தமிழ்க் கட்சிகள் உங்களுடனே வரும் பயப்படாமல் தேர்தலுக்கு தயாராகுங்கள் என்று கூறியது.
'அவசரப்பட்டு தன் பலத்தை சோதித்துப்பார்த்த மஹிந்த'
நாளுக்கு நாள் தனக்கிருக்கும் கிராக்கி குறைந்து செல்லுகிறது என்று எண்ணிய மஹிந்த ராஜபக்ஸ தன்னுடைய வாக்குப்பலத்தை சோதிக்க எண்ணினார். தன்னுடைய சகாக்களுக்கு அதியுச்ச சொகுசினை வழங்கிய ஜனாதிபதி அதன் மூலம் தனக்கிருக்கும் மரியாதை குறைகிறது என்றும் எண்ணினார். இரண்டு வருடம் ஆட்சிக்காலம் மீதமிருந்தும் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாரானார் மஹிந்த. அமெரிக்காவின் சூழ்ச்சியறியாமல் பொது பலசேனாவை ஒன்றுமே செய்யாததால் சிங்கள மக்கள் தனக்கே வாக்களிப்பார்கள் என்று நம்பினார், தமிழ் முஸ்லிம் மக்களும் தான் செய்த அபிவிருத்திகளுக்கு வாக்கப்பார்கள் என்று மலையாய் நம்பி தேர்தலை நடாத்த அறிவித்தார்.
'மஹிந்தவுக்கு சவாலாக மைத்திரிபாலவும், சந்திரக்காவும்'
தன்னுடைய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளர் நாயகம் வேட்பாளராகவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் பிரதான பிரச்சாரத்தை முன்னெடுத்தது பெரும்சவாலாக மாறியது. தனது பலம் குறைந்துள்ளதை அறிந்ம மஹிந்த ராஜபக்ஸ அமெரிக்க சூழ்ச்சி குறித்து புலனாய்வு அறிக்கை சமர்ப்பிக்க சொன்னார். நடந்ததை சொன்னது புலனாய்வு அறிக்கை திகைத்துப்போய் முஸ்லிம் தலைவர்களிடம் மன்றாடினார். முஸ்லிம் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ததற்காக முக்கிய சில அமைச்சர்கள் மஹிந்த ராஜபக்ஸ பக்கமும் இதனை வாய்ப்பாக பயன்படுத்தி பிரபலம் தேடிய ஒரு சில அரசியல் வியாபாரிகள் மைத்திரிபால பக்கமும் சென்றனர். தேர்தல் நடந்தது ஜனாதிபதியானர் மைத்திரிபால சிறீசேன.
'நிறைவேற்று அதிகாரக்குறைப்பு, பாராளுமன்றத்திற்கு அதிகாரம், அமரிக்க பொருளாதார கொள்கை, சிறுபான்மை அரசியல் கட்சிகளின் ஆதிக்கத்தை குறைத்தல் போன்றவை நடந்தேறின'
பாராளுமன்றத்தில் பிரதமருக்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்ட பொழுது பாராளுமன்றம் கலைந்தது, மீண்டும் பொதுத்தேர்தல் ஆகஸ்ட் 17 நடத்த திட்டமிடப்பட்டது.
'நாதியற்ற ஞானசார அரசியல் கட்சியொன்றை பதிவு செய்தார்'
சிங்கள மக்களை தாங்கள் ஒரு பௌத்தத்தை காக்கும் ஒரு அமைப்பு என்று கூறி ஏமாற்றிய பொதுபலசேனா என்ற இனவாத அமைப்பும் அரசியல் கட்சியாய் உருவெடுத்து 'பி.ஜே.பி' என்ற கட்சியை ஆரம்பித்தது இப்படி மதவாதம் பேசி இறுதியில் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து அரசியல் கட்சியாக உருவெடுப்பது ஒன்றும் இலங்கை அரசியல் வரலாற்றிற்கு புதிதல்ல. கள்வர்கள் தங்கள் களவுகளை மறைக்க கட்சி தொடங்குவதும் பாராளுமன்றம் செல்வது நமக்கு பழக்கபட்ட விடயமும் கூட. மஹிந்த கெட்டவருமல்ல ரணில் நல்லவருமல்ல எல்லாம் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகளே
முற்றும்
0 comments:
Post a Comment