தனது ஆசிரியையே காதலித்து திருமணம் செய்த

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரான்

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் தெரிவு செய்யப்பட்டுள்ள இமானுவேல் மக்ரானின் சுவாரஸ்ய காதல் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
இமானுவேல் தனது பாடசாலைப் பருவத்தில் (15 வயது) தனது வகுப்பு ஆசிரியையே காதலித்தார். இமானுவேலின் 30 வயதில் ஆசிரியர் டிராக்னக்ஸை திருமணம் செய்து கொண்டார். திருமணம் நடந்த போது டிராக்னஸுக்கு 55 வயது. இமானுவேலை திருமணம் செய்த போது டிராக்னுஸுக்கு 3 குழந்தைகள் இருந்தது. இருவருக்கும் 25 வருடங்கள் வித்தியாசம் இருந்தது. டிராக்னஸிசின் மகள் ஒருவர் இமானுவேலுடன் படித்து வந்தார். அப்போது இமானுவேல் டிராக்னஸ் மகளை காதலிப்பதாக அனைவரும் நினைத்துக் கொண்டனர்.
ஆனால் 2 வருடங்களுக்கு பிறகு ஒரு நிகழ்ச்சியில் டிராக்னசை சந்தித்த இமானுவேல் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். அப்போது காதலுக்கு டிராக்னஸ் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த சுவாரஸ்யமான காதல் கதை தற்போது வெளியாகியுள்ளது.
கலாசாரத்தை மீறி தன்னை விடவும் மூத்த வயதுடைய பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
அவர் ஒரு முதலாளித்துவ குடும்பத்தை சேர்ந்தவராகும். 11ஆம் வகுப்பில் கல்வி கற்ற Macronக்கு Trogneux நாடகம் ஒன்றை எழுத உதவியுள்ளார்.
இந்த வேலை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இருவரையும் இணைய வைத்துள்ளதுடன் நம்ப முடியாத நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் அவர்களது பெற்றோர் இந்த பிணைப்பினை உடைத்துள்ளனர். Macron தன்னுடைய இறுதி வருட கற்கையை நிறைவு செய்வதற்காக பாரிஸில் ஒரு உயர் பாடசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
நீ என்னை விலக்க மாட்டாய். நான் திரும்பி வருகிறேன், நான் உன்னை திருமணம் செய்துகொள்கிறேன்,” என்று அவர் பகிரங்கமாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
தூரம் அவர்களை பிரிக்கவில்லை. இறுதியில் Trogneux தன்னுடைய முன்னாள் கணவனை விட்டுவிட்டு பாரிசுக்கு சென்றுள்ளார்.
நாங்கள் இருவரும் தொலைபேசி ஊடாக அதன் பின்னர் நேரத்தை செலவிட்டோம். அவர் பொறுமையாக அனைத்து தடைகளையும் உடைத்தார் என அவரது மனைவி Trogneux குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக 2007 ஆம் ஆண்டு அவர்களின் திருமணம் வட கடற்கரை ரிசார்ட்டில் நடைப்பெற்றுள்ளது.
தனது திருமண உரையில், Macron, Trogneuxஇன் குழந்தைகள் அவருக்கு உதவியமைக்காக நன்றியும் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் Macron தன்னை விடவும் 24 வயது மூத்த உயர்நிலைப் பாடசாலை ஆசிரியரை திருமணம் செய்துள்ளார்.

இன்று நடைபெற்ற பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற மக்கள் வாக்கெடுப்பில் மக்ரேன் வெற்றி பெற்று பிரான்ஸ் வரலாற்றில் சாதனை படைத்துள்ளார்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top