சவூதி அரேபியாவுக்கு அரசு பயணமாக

டொனால்டு டிரம்புடன் சென்றஅவரின் மனைவி

அந்நாட்டின் வழக்கப்படி தலையில் முக்காடு போட்டு மூட மறுப்பு.

வூதி அரேபியாவுக்கு அரசு பயணமாக டொனால்டு டிரம்புடன் சென்ற மெலேனியா முஸ்லிம் நாடுகளின் வழக்கப்படி அந்நாட்டில் தலையில் முக்காடு போட்டு மூட மறுத்துள்ளார்.
அமெரிக்கா ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக அரசு பயணமாக இன்று வூதி அரேபியாவுக்கு சென்றார்.
டிரம்புடன் அவர் மனைவி மெலேனியாவும் உடன்சென்றிருந்தார். விமானத்தில் வந்து இருவரும் இறங்கியதும் வூதி மன்னர் சல்மான் அவர்களை வரவேற்றார்.
மன்னருடன் அரசு அதிகாரிகளும் உடனிருந்தனர். இஸ்லாமிய நாட்டுக்கு வந்ததால் அதன் முறைப்படி மெலேனியா தனது தலையில் முக்காடு போட்டு மூடி வருவார் என எதிர்ப்பார்க்கபட்டது. ஆனால், அவர் அப்படி வராமல் சாதாரணமாக விமானத்தில் வந்து இறங்கினார்.
இன்று டிரம்பின் மனைவி தலையை மூடாமல் வந்ததற்கு டிரம்ப் எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கவில்லை.
ஆனால் கடந்த 2015ல் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த போது அவர் மனைவி மிச்சேல் தலையில் முக்காடு போட்டு மூடாமல் வூதி அரேபியாவுக்கு சென்றிருந்தார்.



மிச்சேல் முக்காடு போடாமல் வந்தது தவறு என டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் அப்போது கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top