கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில் அதிபர் பிரச்சினை
இன்று காலை பதட்டமான நிலை
பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.
கல்முனை
ஸாஹிறாக் கல்லூரியில் அதிபர் பிரச்சினை காரணமாக தற்போது ஒரு பதட்ட நிலை ஏற்பட்டிருப்பதாக
அறிவிக்கப்படுகின்றது.கல்லூரிக்குள் பொலிஸாரையும் வரவழைக்கப்பட்டதாகவும்
தெரிவிக்கப்படுகின்றது.
இக்கல்லூரியில் தற்போது அதிபராக MS. முஹம்மட்அவர்கள் கடமையற்றும் நிலையில் இக்கல்லூரியில் அதிபராகக் கடமையாற்றி தற்போது கல்முனை கல்வி அலுவலகத்தில் கடமையாற்றிக் கொண்டிருக்கும்
PMM. பதுர்தீன் அவர்களை மீண்டும் அரசியல்
ஒத்துழைப்புடன் கொண்டுவந்திருப்பது பாடசாலையின் முகாமைத்துவ சபை, பாடசாலை அபிவிருத்தி
சங்க பிரதிநிதிகள், பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள், கல்லூரியின் ஆசிரியர்கள், பகுதி
தலைவர்கள், ஊரின் அரசியல் பிரதிநிதிகள் என்போரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாகத்
தெரிவிக்கப்படுகின்றது.
இது சம்மந்தமாக கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில் அவசர கூட்டம் ஒன்று
நேற்று இடம்பெற்றுள்ளது. இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானம் எகமனதாக
நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஸாஹிறா
கல்லூரியின் அதிபராக PMM. பதுர்தீன் அவர்களை ஏற்பதில்லை
எனவும் தற்போது
அதிபராக இருக்கும்
MS. முஹம்மட் அவர்களை அவரது பதவிக்காலம் முடியும்வரை
அதிபராக இருப்பதற்கு
வலயக்கல்வி அலுவலகத்தை கோருவதுடன் பிரதி அமைச்சர்
ஹரீஸ் உட்பட
உள்ளூர் அரசியல்
தலைமைகளுக்கு அழுத்தம் கொடுப்பதெனவும் , பாடசாலையின் முகாமைத்துவ
சபை, பாடசாலை
அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள், பழைய மாணவர்
சங்க பிரதிநிதிகள்,
கல்லூரியின் ஆசிரியர்கள், பகுதி தலைவர்கள், ஊரின்
அரசியல் பிரதிநிதிகளான
முன்னாள் மாநகரசபை
உறுப்பினர் பஷீர், நசார்தீன் மற்றும் ஊர்ப்
பிரமுகர்களுடன் நேற்று கல்லூரியில்
இடம்பெற்ற கூட்டத்தில்
எகமனதாக தீர்மானம்
நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை இக்கல்லூரிக்கு அதிபராக PMM. பதுர்தீன் அவர்கள் பொறுப்பேற்க வந்துள்ள நிலையில்
நேற்றைய கூட்டத் தீர்மானத்தின் பிரகாரம் இவருக்கு பொறுப்புக்களை வழங்குவதில்லை என்ற
நிலையில் தற்போது இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
இரண்டு ஆசிரியர்கள் அடிபிடியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையிலேயே பொலிஸார் கல்லூரிக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாவும்தெரிவிக்கப்படுகின்றது.
இக்கல்லூரிக்கு அதிபராக பொறுப்பேற்க PMM. பதுர்தீன் அவர்களை கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர்
கல்லூரிக்கு அழைத்து வராமல் ஐக்கிய தேசியக் கட்சி அரசியலில் தொடர்புடைய ஒரு நபரே கல்லூரிக்கு
அழைத்து வந்திருப்பது கல்லூரி ஆசியர்களிடையேயும் பெற்றார்களிடைடயேயும் அதிருப்தியை
ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை. கல்முனை ஸாஹிறாக் கல்லூரியை அதிபராக பொறுப்பேற்க தற்போதய
சூழ்நிலையில் அவசரப்பட்டு கல்லூரிக்கு செல்ல வேண்டாம் எனவும் அங்கு வெளியூரைச் சேர்ந்தவர்களை
அதிபராக ஏற்பதில்லை என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் அவ்வாறு செல்வதாக
இருந்தால் எனக்கு அறிவித்துவிட்டு செல்ல வேண்டும் என்று கூறியிருந்த போதிலும் PMM. பதுர்தீன் அவசரப்பட்டு கல்லூரிக்குச் சென்றுள்ளார் என்று கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர்
தெரிவித்துள்ளதாகவும் அறிய முடிகின்றது.
0 comments:
Post a Comment