கல்முனையின் அபிவிருத்திக்கு முன்வரும்
எந்த ஒரு அரசியல் கட்சிக்கோ அல்லது அரசியல்வாதிக்கோ
குந்தகம் விளைவிக்கக்ககூடாது
கல்முனையின்
எழுச்சிக்கான ஆய்வரங்கத்தில் பிரகடனம் நிறைவேற்றம்
கல்முனையின் அபிவிருத்திக்கு முன்வரும் எந்த ஒரு அரசியல் கட்சிக்கோ
அல்லது அரசியல்வாதிக்கோ, கல்முனையைச் சார்ந்த எவரும் குந்தகம் விளைவித்தலாகாது.
கல்முனை மண்ணின் கல்வி, சமூக, கலாசார, அபிவிருத்தி தொடர்பான
எழுச்சிக்கான கல்முனையன்ஸ் போரத்தின் ஏற்பாட்டில் "விழித்தெழு " எனும் ஆய்வரங்கம்
ஆஸாத் பிளாசா மண்டபத்தில் கடந்த 20 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற
போது இந்த பிரகடனம் நிறைவேற்றப்பட்டது.
கல்முனையில் இடம்பெற்ற 'கல்முனையின் எழுச்சிக்கான ஆய்வரங்கம் - 2017' நிகழ்வில், 10 விடயங்களை உள்ளடக்கிய கல்முனை பிரகடனம் நிறைவேற்றப்பட்டது.
கல்முனையின் அடையாளமும், அபிவிருத்தியும் பேணப்படுவது அரசியல்வாதிகளினதும், அதிகாரிகளினதும், சிவில் சமூகத்தினதும் தலையாய கடமையாகும். கல்முனையின் அபிவிருத்திக்கு முன்வரும் எந்த ஒரு அரசியல் கட்சிக்கோ அல்லது அரசியல்வாதிக்கோ, கல்முனையைச் சார்ந்த எவரும் குந்தகம் விளைவித்தலாகாது.
இன, மத, குல, கட்சி பேதம் மறந்து, கல்முனையின் அபிவிருத்திக்கு கைகோர்ப்பதே இன்றைய நமது தேவையயும் கடமையுமாகும். தேர்தல் காலங்களுக்குப் பின்னரும் அரசியல்வாதிகள், கல்முனையின் உரிமையிலும் அபிவிருத்தியிலும் கவனஞ்செலுத்த வேண்டும்.
கல்முனையின் அபிவிருத்தியில், அரச மற்றும் தனியார் சேவையாளர்களும் பங்களிப்பு நல்கவேண்டும் உள்ளிட்ட 10 விடயங்கள் அடங்கிய பிரகடனமே, இதன்போது நிறைவேற்றப்பட்டது.
0 comments:
Post a Comment