கைதுசெய்யப்பட்ட மியன்மார்முஸ்ஸிம் அகதிகள்
நாடு திரும்புவதில் அதிருப்தி
யாழ்ப்பாணம்
காங்கேசன்துறை கடல் எல்லைப்பகுதிக்குள் வைத்து கைதுசெய்யப்பட்ட
மியன்மார் நாட்டைச்
சேர்ந்த முஸ்ஸிம்கள்
மிரியான தடுப்பு
முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம்
நீதவானின் உத்தரவிற்கு
அமைவாக இவர்கள்
கடந்த 30ம்
திகதி கடற்படையினரால்
கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களுள்
30 மியன்மார் நாட்டைச் சேர்ந்தவர்களும் 2
இந்தியர்களும் அடங்கியுள்ளனர். 16 சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணிப்
பெண்களும் இதில்
உள்ளடங்குவர்.
சட்டமா
அதிபரின் ஆலோசனை
கிடைக்கும் வரையில் எதிர்வரும் 16ம் திகதி
வரையில் இவர்களை
இந்த தடுப்பு
முகாமில் வைக்குமாறு
நீதவான் உத்தரவு
பிறப்பித்துள்ளார்.
மியன்மார்
நாட்டை சேர்ந்த
இவர்கள் மீண்டும்
தமது நாட்டிற்கு
செல்வதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை.
இவர்கள் கடந்த
4 மாதகாலமாக இந்தியாவில் தங்கியிருந்ததாகவும்
இவர்களிற்கு வழங்கிய வசதிகள் திருப்திகரமாக இல்லை
என்றும் தெரிவித்தனர்
. இதன் காரணமாக
வள்ளம் மூலம்
தப்பியோட முயற்சித்ததாக
குறிப்பிட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment