குருணாகல் முஸ்லிம்களுக்கும் பள்ளிவாசல்களுக்கும்

உரிய பாதுகாப்பு வழங்கவும்..



நேற்றிரவு ஞானசாரவை  கைது செய்வது சம்பந்தமாக பொலிசாருக்கும் ஞானசாரவுடன் வந்த கும்பலுக்கும் இடையில் குருணாகல் தம்புல்ல வீதியில் அமைந்துள்ள தோரயாய முஸ்லிம் கிராமத்துக்கருகில் வாக்குவாதத்தின் பின்புமுஸ்லிம்கள் மோசமான முறையில் சாடப் பட்டதும் அதன் பின்பு அதிகாலை மல்லவபிட்டிய ஜும்ஆப் பள்ளிவாசல்ஓரு குழுவினரின் பெற்றோல் குன்டுத் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதைத்தொடர்ந்து முஸ்லிம்களுக்கு மத்தியில் கடும்பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலமையில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த அச்சுறத்தலால் முஸ்லிம் பள்ளிவாசல்கள் மறறும்முஸ்லிம்களின் உடமைகளுக்கும் முஸ்லிம்களின் உயிர்களுக்கும்  உரிய பாதுகாப்புகளை  வழங்குமாறு குருணாகல்பிரதி பொலிஸ் மா அதிபர் கிரகரி குறே அவர்களைச் சந்தித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் முற்போக்கு முண்ணனியின் தேசிய அமைப்பாளர் அப்துல் சத்தார் வேன்டுகோள் விடுத்தார்.

முப்பது வருடகால யுத்த முடிவின் பின்பு முஸ்லிம்களை இலக்கு வைத்து மீன்டும் நாட்டில் ஒரு யுத்தத்தைஉருவாக்கும் நோக்குடன் சிங்கள முஸ்லிம் மக்களுக்கிடையில் பிரச்சனைகளை உருவாக்க்கூடிய பலநடவடிக்கைகளை  திட்டமிட்ட  தீய சக்திகள்  சில காலமாக முன்னெடுத்து வருகின்றன. கடந்த ஆட்சியின் போதுகுருணாகல் மாவட்டத்தில் குளியாப்பிட்டிய நகரத்தில் பன்றி உருவத்தின் மீது அல்லாஹ் என்ற வாசகத்தினை எழுதிஊர்வலம் சென்றதுடன் வாரியப்பொல,மெல்சிரிப்புர, குருணாகல், தெதுருஒயகம பள்ளிவாசல் போன்ற இடங்களில்அசம்பாவிதங்கள் தலை தூக்கிய பொழுதும் பொலீசாரால் அவைகள் கட்டுப்படுத்தப்பட்டன. இதன் உச்ச கட்டமானஅலுத்கம கலவரம் ஏற்படுத்தப்பட்டது. இந்த அலுத்கம கலவரம் கடந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பவதற்குறியமுஸ்லிம்களின் பலத்த எதிர்ப்புக்குறிய சாதகமாக அமைந்தது கசப்பான உண்மையே. என்றாலும் அலுத்கமகலவரத்தை தொடர்ந்து இப்பாகமுவ பன்னல,மல்லவபிட்டிய பள்ளிவாசல்கள் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டதன்பின்பு தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு மேலாக பள்ளிவாசல்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.


இன்றும் அப்படியான ஒரு அச்ச சூழ் நிலை முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது விசேடமாக எதிர் வரும் நோன்புக்காலம்பெண்கள் உட்பட முஸ்லிம்கள் இரவுக் காலங்களில் பள்ளிவாசல்களுக்கு செல்வதற்குறிய தேவை இருப்பதால்இதற்குறிய பாதுகாப்பு இல்லாததால் உடனடியாக முஸ்லீம்களுக்குறிய பாதுகாப்பு ஏறபாடுகளை செய்து தருமாறு DIG கிரகரி குறே அவர்களிடம் அப்துல் சத்தார் வேன்டுகோள் விடுத்தார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top