மூன்று அரபு நாட்டு உயர்ஸ்தானிகர்கள்
மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை முக்கியமான மூன்று அரபு நாட்டு உயர்ஸ்தானிகர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கொழும்பு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்தில் இலங்கையில் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா இஸ்ரேல் அகிய நாடுகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளமை தொடர்பிலும் மஹிந்த ராஜபக்ஷவின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையுடன் மிக நெருக்கமாக இருந்து தற்போது நல்லாட்சியால் சற்று தூரமாக்கப்பட்டுள்ளதும் யுத்தத்தின் போது இலங்கைக்கு பலவிதத்திலும் உதவிய ஒரு முஸ்லிம் நாட்டு உயர்ஸ்தானிகரும் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளதாகவும் அவர் கொழும்பு ஊடக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் ஐ நா வாக்கெடுப்புகள் உள்ளிட்ட பல விடயங்களில் அரபு நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment