புதிய அரசியலமைப்பின் வழிகாட்டல் குழுவின் அறிக்கை

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது


அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

வழிகாட்டல் குழுவின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை நாடாளுமன்றத்தில் இந்த இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தார்.

அரசியலமைப்பை உருவாக்குவதற்காக வழிகாட்டல் குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட யோசனைகளின் அடிப்படையில் இந்த இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டு, கருத்துக்களைப் பெற்று, அரசியலமைப்பு வரைவு ஒன்று தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
 அவையில் அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றிய பிரதமர், இலங்கை ஒரே அரசின் கீழ் செயற்படும் என்பதே அதன் முதலாவது வசனமாகு அமைந்துள்ளதாக தெரிவித்தார்.
 அதுபோன்று, அதிகார பரவலாக்கம் தொடர்பிலான யோசனைகளும் அதில் உள்ளடங்கியுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு, இந்த இடைக்கால அறிக்கையை எதிர்வரும் மாதம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதாக அவர் இதன்போது தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பு தொடரிபில் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் யோசனைகளே அன்றி, இவை சட்டங்கள் அல்ல என தெரிவித்த பிரதமர், பொதுமக்களின் அபிப்பிராயத்தின் பின்னரே அது இறுதி வடிவம் பெறும் என சுட்டிக்காட்டினார்.

இவ்விடைக்கால அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் தொடர்பில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற இரு பிரதான கட்சிகள் தங்களது சம்மதத்தை தெரிவிக்கும் நிலையில் தானும் அதனை அனுமதிப்பதாக பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

பிரித்து கூறு போட முடியாத ஒரே இலங்கையை அங்கீகரிப்பதற்கு அனைத்து சமூகத்தினரும் தயாராக இருக்கின்றனர் எனவும் இது ஒரு இவ்வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பம் எனவும் தெரிவித்த பிரதமர், பிரிவினைகள் காணப்பட்டிருந்த இந்நாட்டில் பொதுவான ஒரு கொள்கையை ஏற்படுத்தும் பொருட்டு அரசாங்கமும் எதிர்க்கட்சியும் இணைந்துள்ளதாக சுட்டிக் காட்டினார்.

இவ்வாறான அரிய சந்தர்ப்பம், எமது கைகளிலிருந்து நழுவிச் செல்வதற்கு இடமளிக்கக் கூடாது எனவும் தெரிவித்தார்.

பல்வேறு தேவைகளை மிக வினைத்திறன் மிக்க வகையில் நிறைவேற்றும் பொருட்டு, அதற்கு அவசியமான அதிகாரத்தை பிரிப்பதற்கான அடிப்படை கொள்கைகள், மாகாண சபை முதலமைச்சர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top