சுகததாச உள்ளக அரங்கில், முன்னாள் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தனவினால் எழுதப்பட்ட இருண்ட கதை என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு அமைய தேர்தல் ஒத்தி வைக்கப்படுவது தவிர்க்கப்பட்டாலும் இந்த அரசாங்கம் மிகவும் அழகாக பெண்களைப் பயன்படுத்தி தேர்தலை ஒத்தி வைப்பதாக தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு வாக்குரிமை அளிப்பதற்காக, தேர்தல்களை ஒத்தி வைப்பதாக அரசாங்கம் கூறியிருப்பது அரசாங்கத்தின் பயந்த தன்மையை வெளிப்படுத்துவதாகவும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தை நிறைவேற்றிய தினம் ஜனநாயகத்தின் இருண்ட நாளாகவே கருதப்பட வேண்டும்.
எனவே இன்றைய தினம் இருண்ட கதையொன்றையே பேச வேண்டியுள்ளது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment