உலகின் மிகவும் கவர்ச்சியான அரசியல்வாதியும்

குத்துச்சண்டை வீரருமான

கனேடிய பிரதமர் செய்த செயல்!

ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தின் கருத்தாக்கம் கொண்ட காலுறை அணிந்து கொண்டு சர்வதேச நாணய நிதியத்தின் தலைவரை கனேடிய பிரதமர் சந்தித்துள்ளது பரவலாக பேசப்படுகிறது.

உலகின் மிகவும் கவர்ச்சியான அரசியல்வாதிகளில் ஒருவர் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.

குத்துச்சண்டை வீரரான ட்ரூடோ கனேடிய பிரதமராக ஆட்சிக்கு வந்ததில் இருந்து துணிச்சலாக பல விடயங்களையும் முன்னெடுத்து வருகிறார்.

எஞ்சிய அரசியல்வாதிகள் கலந்துகொள்ள தயங்கும் அல்லது புறக்கணிக்கும் LGBT பேரணிகளுக்கு பிரதமர் ட்ரூடோ துணிச்சலாக கலந்துகொண்டு அவர்களின் வானவில் காலுறையை அணித்து சென்று அவர்களை ஊக்குவித்துள்ளார்.

இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவரான Christine Lagarde உடனான சந்திப்பின்போது பிரபல ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தின் சிவ்பக்கா காலுறை அணிந்து சென்றுள்ளது தற்போது அவரது ஆதரவாளர்களிடையே பெருமையாக பேசப்படுகிறது.

கனேடிய பிரதமரின் இதுபோன்ற செயல் முதன்முறையல்ல. அயர்லாந்தில் சென்றபோது அவர்களது பாரம்பரிய சின்னமாக கடமான் பொறித்த காலுறை அணிந்து சென்றார்.


மட்டுமின்றி கடந்த மே மாதம் இரண்டு காலிலும் இருவேறு காலுறை அணிந்து சென்று தலைப்புச் செய்தியாகவும் மாறினார் ஜஸ்டின் ட்ரூடோ.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top