வினோத தோற்றத்துடன் பிறந்திருக்கும் குழந்தை!

கடவுள் தந்த பரிசு! உள்ளம் நெகிழும் தம்பதியர்!!


உத்தரப் பிரதேசம், அலிகாரின் கிராமம் ஒன்றில் வினோத தோற்றத்துடன் பிறந்திருக்கும் குழந்தையை அதன் பெற்றோர்கள் ஏற்றுக்கொண்ட நெகிழ்ச்சியான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த தம்பதியருக்கு ஏற்கனவே இரண்டு வயதில் மகள் ஒருவர் இருக்கிறார். அவர்களுக்கு அண்மையில் ஆண் குழந்தையொன்று பிறந்தது, வித்தியாசமான தோற்றத்துடன்!

காதுகள் இல்லாத அந்தக் குழந்தையின் கண்கள் இரண்டும் பெரிதாக வீங்கியிருக்கின்றன. நாசித் துவாரங்களுக்குப் பதிலாக ஒரேயொரு ஓட்டை மட்டுமே இருக்கிறது.

பார்ப்பதற்கு விகாரமான தோற்றம் கொண்ட இந்தக் குழந்தையைக் கண்டு முதலில் அதிர்ச்சியுற்ற பெற்றோர், ‘கடவுள் தந்த பரிசுஎன்று கூறி குழந்தையை வளர்க்கச் சம்மதித்து ஏற்றுக்கொண்டனர்.

என்றபோதும், கிராமவாசிகள் அந்தக் குழந்தையை வேற்றுக்கிரகவாசி என்று பெயரிட்டு அழைப்பதுடன், அவ்வப்போது வந்து அந்தக் குழந்தையைப் பார்த்துச் செல்கிறார்கள்.

எவ்வாறெனினும், இரண்டு கிலோ எடையுடன் பிறந்த அந்தக் குழந்தை பூரண ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பத்தில் அது குறித்து கவலையடைந்த அந்தக் குழந்தையின் தந்தை, அதையே அந்தக் குழந்தையின் சிகிச்சைக்குத் தேவையான பொருள் திரட்டும் வாய்ப்பாக மாற்றிக்கொண்டார்.


தற்போது, அந்தக் குழந்தையைக் காண வரும் மக்களிடம் குழந்தையின் சிகிச்சைக்குப் பண உதவி தருமாறு கோரி வருகிறார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top