அம்பாறை மாவட்டத்தில் புதிதாக

உள்ளூராட்சி மன்றங்களை ஸ்தாபித்தல்

பொதுமக்களிடம் அரசாங்க அதிபரின் வேண்டுகோள்

அம்பாறை மாவட்டத்தில் புதிதாக உள்ளூராட்சி மன்றங்களை ஸ்தாபித்தல் மற்றும் இருக்கின்ற மன்றங்களை தரமுயர்த்துதல் தொடர்பான பொதுமக்களின் ஆலோசனைகளை, கருத்துக்களை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்பாக அனுப்பிவைக்குமாறு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர். துசித பி வணிகசிங்க பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் தொடரந்தும் தெரிவித்திருப்பதாவது,
இலங்கையில் புதிதாக உள்ளூராட்சிசபைகளை உருவாக்குதல் அல்லது தரமுயர்த்துதல் தொடர்பாக மாவட்ட மட்டத்தில் ஒவ்வொரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.
மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளது. குறித்த குழு மாவட்டம்தோறும் பொது அமைப்புகளதும், பொதுமக்களதும் கருத்துக்களையும், ஆலோசனைகளையும், முன்மொழிவுகளையும் பெற்றுவருகின்றது.
அத்துடன், அம்பாறை மாவட்டத்தில் அரசாங்க அதிபரை தலைவராகக்கொண்டு உருவாக்கப்பட்ட இந்த குழு தற்போது பொதுமக்களது கருத்துக்களை பெற்று வருகின்றது.
இந்த நிலையில், அம்பாறை மாவட்டத்தில் ஏற்கனவே குழுவுக்கு கிடைக்கப்பெற்ற 3 கீழ்வரும் முன்மொழிவுகளுக்கான பொதுமக்களின் கருத்துக்களை அனுப்பிவைக்க வேண்டும்

சாய்நதமருது என புதிய பிரதேசசபையை உருவாக்குதல், அம்பாறை நகரசபையை மாநகர சபையாகத் தரமுயர்த்துதல், சம்மாந்துறை பிரதேசசபையை நகரசபையாக தரமுயர்த்துதல் ஆகிய மூன்று முன் மொழிவுகளுக்கான கருத்துக்களை அனுப்புமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top