தலைப்பிறை பார்க்கும் மாநாடு
றபீயுல்
அவ்வல் மாதத்திற்கான
தலைப்பிறை பார்க்கும் மாநாடு
மௌலவி ஜே.அப்துல் ஹமீத்
(பஹ்ஜி) தலைமையில் 19ஆம்
திகதி ஞாயிற்றுக்கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு
பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளதாக குறித்த பள்ளிவாசலின்
பொதுச் செயலாளர் எம்.தௌபிக் சுபைர் தெரிவித்துள்ளார்.
இம்மாநாட்டில் கொழும்பு
பெரிய பள்ளிவாசலின் நிருவாகிகள், பிறைக்குழு
உறுப்பினர்கள், அகில
இலங்கை ஜம்இயத்துல்
உலமா சபையின் பிறைக்குழு
உறுப்பினர்கள், முஸ்லிம்
சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள், மேமன், ஹனபி
பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து
கொள்ளவுள்ளனர்.
இம்மாநாட்டில் தலைப்பிறை பற்றி எடுக்கப்படும் தீர்மானம் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையினூடாக
அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment