இன்று காலை இலங்கை வந்தடைந்தார்
அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல்.!
அவுஸ்ரேலிய
பிரதமர் மெல்கம்
டர்ன்புல் இலங்கைக்கான
விஜயத்தினை மேற்கொண்டு இன்று காலை கொழும்பை
வந்தடைந்தார்.
கட்டுநாயக்க
சர்வதேச விமானநிலையத்தில்
விசேட விமானம்
மூலம் இன்று
காலை வந்தடைந்த அவுஸ்ரேலிய
பிரதமருக்கு சட்ட ஒழுங்கு மற்றும் தென்மாகாண
அமைச்சர் சாகல
ரத்னாயக்க தலைமையில்
விமானநிலையத்தில் அமோக வரவேற்பு வழங்கப்பட்டது.
இவர்
ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன மற்றும்
பிரதமர் ரணில்விக்கிரமசிங்க
ஆகியோரை சந்தித்து
பேச்சுவார்த்தை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரு
நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர நல்லுறவிற்கு
70 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு அவுஸ்ரேலிய பிரதமர்
இலங்கைக்கு விஜயம் செய்திருப்பதாக இலங்கைக்கான அவுஸ்ரேலிய
உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இரு
நாடுகளுக்கிடையே பொருளாதார ரீதியில் வலுப்படுத்தல்
, சர்வதேச குற்றச்செயல்களை
தடுத்தல் உள்ளிட்ட
பல்வேறு விடயங்கள்
தொடர்பில் அவுஸ்ரேலிய
பிரதமர் பேச்சுவார்த்தை
நடத்தவுள்ளார்.
0 comments:
Post a Comment