இன கலவர தாக்குதல் தொடர்பில் 445 முறைப்பாடுகள்
280 பேர் கைது கண்டியில் மாத்திரம் 178 பேர் கைது
இன முறுகலை ஏற்படுத்தும்
ஆயிரக் கணக்கான போஸ்டர்களும் மீட்பு
கடந்த
வாரம் கண்டி
உட்பட நாட்டின்
பல்வேறு இடங்களில்
இடம்பெற்ற இன
கலவர தாக்குதல்
சம்பவங்கள் தொடர்பில் கடந்த 4ம்
திகதி தொடக்கம்
நேற்று (12) வரையில் வீடுகள், கடைகள் சேதமாக்கப்பட்ட
சம்பவங்கள் தொடர்பில் 445 முறைப்பாடுகள்
கிடைக்கப்பெற்றுள்ளன என்று பொலிஸ்
ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
பொலிஸ் தலைமையகத்தில் இன்று
(13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இத்தகவலை
தெரிவித்தார்.
கண்டியில்
மட்டும் 423 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதில் 19 மதஸ்லங்களும் உள்ளடங்குகின்றன.
ஏனைய பிரதேசங்களில்
சேதங்கள் தொடர்பில்
22 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இக்கலவரங்கள்
தொடர்பில் மொத்தமாக
280 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு,
கண்டியில் மாத்திரம்
178 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த
சம்பவம் தொடர்பில்
கைதான 10 பிரதான
சந்தேகநபர்களும் பயங்கரவாத தடுப்பு பிரிவினால் விசாரணைக்கு
உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தொடர்பில்
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில்,
அவர்கள் பயன்படுத்திய
அலுவலகங்களில் இருந்து, இன முறுகலை ஏற்படுத்தும்
ஆயிரக் கணக்கான
சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் மீட்கப்பட்டுள்ளதோடு, 4 கணனிகளும் (CPU) மீட்கப்பட்டுள்ளதாக
பொலிஸ் ஊடக
பேச்சாளர் தெரிவித்தார்.
இக்கலவரத்தில்
19 மத ஸ்தலங்கள்
சேதமாக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
வாகன சேதம் தொடர்பில
கண்டியில் மட்டும்
60 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதோடு, ஏனைய பகுதிகளிலிருந்து 5 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக,
பொலிஸ் ஊடகப்பேச்சாளர்
இதன்போது தெரிவித்தார்.

0 comments:
Post a Comment